சுக்கிர பகவான் செல்வதற்கும், செழிப்பிற்கும் பெயர் பெற்றவர். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அவர்களின் வாழ்வில் பணம் சார்ந்து எவ்வித பிரச்னையும் வராது. ரிஷபம், துலாம் ராசிகளுக்கு அதிபதியாக திகழும் சுக்கிர பகவான் மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுகிறார். இவருடைய ராசி மாற்றம் 12 ராசிகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் 13 அன்று, சுக்கிரன் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். வெள்ளிக்கிழமை, சுக்கிரன் தனது சொந்த ராசியில் சஞ்சரிப்பது 4 ராசிக்காரர்களுக்கும் மங்களகரமாக இருக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் எந்த நான்கு ராசிக்காரர்கள் நன்மை பெறுவார்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்

பரணி நட்சத்திரத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார ஆசைகளை நிறைவேற்றும், மகிழ்ச்சியை அதிகரிக்கும். வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் சொந்த வீடு வாங்கும் நிலைக்குள் வருவார்கள். தொழிலில் தடைபட்ட பணிகள் தீரும். திருமணம் செய்தவர்களுக்கு காதல் வாழ்க்கை மேம்படும். வேலை தொடர்பான பிரச்சினைகள் தீரும். பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். வீட்டுப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மகிழ்ச்சியான நேரங்களும் மகிழ்ச்சியான நாட்களும் உருவாகும்.
துலாம்

பரணி நட்சத்திரத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலையை மேம்படுத்தும். இந்த நேரம் உங்கள் பணம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவியாக இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும், மேலும் தங்களுக்கு சமூகத்தில் நற்பெயர்ச்சி கிடைக்கும். முதலீட்டில் லாபம் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு அல்லது புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.
மகரம்

பரணி நட்சத்திரத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரும். திருமண வாழ்க்கை வலுவாக இருக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். பழைய நண்பர்கள் மீண்டும் சந்திப்பு. காதல் வாழ்க்கையில் உறவு ஏற்படும். முக்கியமான முடிவுகள் எடுக்க சரியான நேரம். உங்கள் ஆளுமை மேம்படும். உறவுகள் வலுவடையும். காதல் வாழ்க்கை முன்பை விட மேம்படும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
மீனம்

பரணி நட்சத்திரத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். தொழிலில் நன்மை கிடைக்கும், வேலை செய்பவர்களுக்கு அதிகாரிகளுடனான உறவு வலுவாக இருக்கும்.வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். வியாபாரத்தில் அதிக லாபம் வரும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிட உங்களுக்கு நேரம் கிடைக்கும். திருமணம் செய்தவர்களுக்கு உறவு மேம்படும். திருமணம் செய்யாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடும்.
இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் வைகாசி மாதம் முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது!!