செல்வம், பெருமை, செல்வாக்கு, செழிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றுக்கு காரகத்துவம் பெற்ற கிரகமான குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 12 ராசிகளையும் முழுமையாக சுற்றி வர குரு பகவான் 12 ஆண்டு காலத்தை எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார். அவரது அடுத்த பெயர்ச்சி சுமார் 1 வருடத்திற்குப் பிறகு அதாவது 2025 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி நடைபெறும். அப்போது அவர் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைவார். பொதுவாக, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல, குரு பகவான், ஒரு ஆண்டு காலம் எடுத்துக் கொள்ளும் நிலையில், விசுவாவசு புத்தாண்டில், குரு பகவான் மூன்று முறை பெயர்ச்சியாகிறார். பொதுவாக நவகிரகங்களில் சூரியன் மற்றும் சந்திரனை தவிர மற்ற அனைத்து கிரகங்களும் அவ்வப்போது அதிசார வக்ர நிலையினால் முன்னும், பின்னும் செல்ல வேண்டிய நிலை உண்டாகும். அந்த வகையில் தன்னைவிட அதிக ஈர்ப்பு விசை கொண்ட செவ்வாயை கடந்து செல்லும் போது ஈர்ப்பு விசையில் இருந்து காத்துக்கொள்ள குருபகவான் சாதாரணமாக நகரும் வேகத்தை விட 6 மடங்கு தனது வேகத்தை அதிகரித்து நகர தொடங்குவார் இதனை தான் அதிசார குரு பெயர்ச்சி என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் வைகாசி தொடக்கத்தில் நிகழும் குரு பெயர்ச்சி மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கப் போகிறது. யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியினருக்கு குரு பெயர்ச்சி சந்தான பாக்கியத்தை கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. மனதின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். சமூக அந்தஸ்து உயரும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான காலமாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். உங்களின் மரியாதை அந்தஸ்து அதிகரிக்கும். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களுக்குச் செலவுகள் ஏற்படும். கவனமும், கடின உழைப்பும் இருந்தால் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியினருக்கு குரு பெயர்ச்சி, இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தையும் நீக்கும். கடும் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். காரணமாக நிதிநிலை மேம்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் தீரும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம், வளர்ச்சியை சந்திக்கலாம். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். அரசுத் துறைகளில் தேர்வுக்கு தயாராவோருக்கு, நேரம் சாதகமாக அமையும். பயணங்கள் சாதகமாக அமையும்.
துலாம்

துலாம் ராசியினருக்கு குரு பகவானின் அருளால் செல்வத்திற்கு குறைவிருக்காது. மனம் ஆன்மீகத்தில் ஈடுபடும். வீடு வாகனம் வாங்கும் யோகம் கைகூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுடன் உறவு பலமாகும். உங்கள் வாழ்க்கையில் சில திடீர் மாற்றங்கள் உண்டாகும். விரும்பிய பணிமாற்றம், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளும் சாதகமாகும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025 செவ்வாய் பெயர்ச்சியால் பல பிரச்சினைகளை சந்திக்க போகும் ராசிகள்!!


