வார ராசிபலன் – 15 ஜூன் 2025 முதல் 21 ஜூன் 2025 வரை!!
மேஷம் இந்த வாரம் எதிர்கால நன்மைக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவர்.ராசியில் உள்ள சுக்கிரன் ஏழாம் இடத்தை பார்ப்பதால் புதிய தொடர்புகளால் நன்மை ஏற்படும். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர் வீட்டு விசேஷ
மேஷம்
இந்த வாரம் எதிர்கால நன்மைக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவர்.ராசியில் உள்ள சுக்கிரன் ஏழாம் இடத்தை பார்ப்பதால் புதிய தொடர்புகளால் நன்மை ஏற்படும். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு உற்சாகமாக இருப்பார்கள். மன முதிர்ச்சியும் தைரியமும் உங்கள் செயல்களில் பிரதிபலிக்கும். குடும்ப பிரச்னைகள், கருத்து வேறுபாடுகள் மறையும். அரசாங்க காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். போட்டித் தேர்வுகள் வெற்றி தரும். பணவரவு சுமுகமாக இருக்கும். இந்த வாரம் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ரிஷபம்
இந்த வாரம் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவார்கள். பத்தாம் இடத்தில் உள்ள ராகு, சந்திரனை குரு பார்ப்பதால் இந்த வாரம் காரிய வெற்றிகள் உண்டு. தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று திறமையாக செயல்படுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட வேண்டிய காலகட்டம் இது. சிரமங்கள் குறையும். வலிகள் குறையும். பொருள் வரத்து அதிகரிக்கும். இதுவரை இருந்த செயல் தடைகள் மாறும். நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொழில் நல்லவிதமாகவே நடைபெறும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. சொத்துக்களில் வில்லங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாங்கும் போதும் விற்கும் போதும் கவனமாக இருங்கள். வீடு மாற்றம் இடமாற்றம் உண்டு.
மிதுனம்
இந்த வாரம் மனதில் குதூகலமும், மகிழ்ச்சியும் ஏற்படும். ராசியில் சூரியன் சஞ்சரிப்பது மனதில் தைரியத்தை ஏற்படுத்தும். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த அங்கீகாரத்தை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்துவர். இந்த வாரம் பிரச்னைகள் குறைவாகவும் சாதகங்கள் அதிகமாகவும் உள்ள வாரமாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். அதிக அலைச்சல் உண்டு. சுப முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். உறவினர்களிடம் ஒற்றுமை குறையலாம். சிலர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலையைத் தேடலாமா என்று நினைப்பீர்கள். வாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் எதிரிகள் தாங்களாகவே சமரசம் செய்ய முன்வரலாம்.
கடகம்
இந்த வாரம் புதிய செய்திகள் வந்து சேரும். பத்தாம் இடத்தில் உள்ள சுக்கிரன் சமூக மதிப்பை உயர்த்துவார். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை சந்தித்து செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவார்கள். எதையும் பரபரப்போடு செய்ய வேண்டாம். புதிய முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுங்கள். மற்றவர்களைப் பற்றித் தேவையில்லாத விமர்சனங்களைச் செய்து மாட்டிக் கொள்ள வேண்டாம். உங்கள் பிரச்னைகளை மற்றவர்களிடம் விவாதிக்க வேண்டாம். ஒரு பெண் நண்பரின் உதவியுடன், காதல் உறவுகளில் உள்ள தவறான புரிதல்கள் நீங்கும். வார இறுதியில், நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லலாம்.
சிம்மம்
இந்த வாரம் திடீர் தன வரவு ஏற்படும். பதினொன்றாம் இடத்தில் குரு, ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டு. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மனதிற்கு இனிய சூழலில் பணியாற்றுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். சந்திக்க வேண்டிய நபர்கள் உங்களைச் சந்திப்பார்கள். அந்தச் சந்திப்பு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன் / மனைவியின் ஆரோக்கியப் பிரச்னைகளைக் குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாய் தகராறுகள் மனக்கசப்பைத் தரும். பிரயாணங்களில் கவனம்தேவை.
கன்னி
இந்த வாரம் பல்வேறு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். ஆறாம் இடத்தில் உள்ள ராகுவை குரு பார்ப்பதால் நோய்கள் விலகும். தனியார் உத்தியோகஸ்தர்கள் வேறு பணி வாய்ப்பு குறித்த தகவலை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களது ஆசிகளை பெறுவது வெற்றிக்கு வழிவகுக்கும். குடும்பத்தில் அமைதியும் பொருளாதார முன்னேற்றமும் இருக்கும். எடுத்த காரியங்கள் வெற்றி ஆகும். பதவி உயர்வால் இடமாற்றம் ஏற்படலாம். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் நல்ல அங்கீகாரமும் வாழ்த்துகளும் கிடைக்கும். வேலை மாற்றம் இடமாற்றம் போன்றவை நிகழும் போது கலங்க வேண்டாம். அது உங்களுக்கு சாதகமாகவே அமையும். மருத்துவச் செலவுகளும் உண்டு.
துலாம்
இந்த வாரம் குடும்பத்திலும், சமூகத்திலும், மதிப்பு மரியாதை பெருகும். ஒன்பதாம் இடத்தில் உள்ள குரு காரிய வெற்றிகளை தருவார். அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் செலவுகள் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி மற்றும் பணி வாய்ப்பு குறித்த எண்ணங்கள் உருவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கிரக அமைப்புகள் உண்டு. புதிய தொழில்கள் கைவசப்படும். தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்கு நல் வாய்ப்புக்கள் கிடைக்கும். கணவன் அல்லது மனைவி உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும் காரியத்தடைகள் ஏற்படும். சகோதரர்களுடன் உரசல்கள் வேண்டாம்.
விருச்சிகம்
இந்த வாரம் தடைபட்ட பொருளாதாரம் வந்து சேரும். ராசிக்கு ஆறாம் இடம், எட்டாம் இடம் ஆகியவற்றின் சுப கிரகங்கள் இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டு. தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவர். பொருளாதாரத்தில் தொய்வு இருக்காது. சில இடைஞ்சல்களை புத்திசாலித்தனமாக முறியடிப்பீர்கள். இருக்கும் இடத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் சிலருக்கு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கலாம். பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. கெட்ட பெயர் எடுக்க வேண்டாம்.
தனுசு
இந்த வாரம் நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயங்களை நல்லவிதமாக செய்து முடிப்பார்கள். ராசி அதிபதி ராசியை பார்க்கும் இந்த காலத்தில் மனதில் நினைத்தவை நிறைவேறும். தனியார் நிறுவன உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டும் பேசுவது நல்லது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புதுமையாக சிந்தித்து, திறமையாக செயல்படுவர். கலைஞர்களுக்கு நல்வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. பணப்பிரச்னை ஏதாவது ஒரு வகையில் தீர்ந்துவிடும். தொழில் வணிகம் இவற்றில் மனைவியின் அல்லது கணவரின் உதவி துணையாக இருக்கும். தேவையில்லாத பிரயாணங்களின் அலைச்சல்களால் மனதில் சோர்வு ஏற்படும். வாகன பராமரிப்பில் கவனம் செலுத்தவும்.
மகரம்
மகரம் ராசியினருக்கு இந்த வாரம் திடீர் பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். தைரிய ஸ்தானத்தில் உள்ள சனி காரிய வெற்றியை தருவார். அரசு உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து அவரது ஆதரவை பெற வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு புதிய இடங்களுக்கு செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிக முக்கியமான முடிவு ஒன்றினைத் தீர்மானமாக எடுப்பீர்கள். வெகுகாலம் உங்கள் மனதை குழப்பிக் கொண்டிருந்த பிரச்னைக்கு ஒரு விடை கிடைக்கும். குடும்ப பிரச்னைகள், குழப்பங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வாரம் இது. சில நேரத்தில் உங்களை அறியாமலேயே முரட்டுத் தனமாக நடந்து கொள்வீர்கள். சிந்தித்து விடை காணுங்கள்.
கும்பம்
இந்த வாரம் உடன் பிறந்தவர்களால் லாபம் அடைவர். ஐந்தாம் இடத்தில் உள்ள குருவும், புதனும் நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை கவனமாக செய்து வர வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு வண்டி வாகனங்களில் நிதானமாக செல்வது அவசியம். என்ன வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற நினைப்பு வரும். யாரோ ஒருவர் ஆபத்பாந்தவர் போல வந்து உங்களுக்கு நல்லது செய்வார். உங்களைவிட பெரியவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். இனிமையான தகவல்கள் வந்து சேரும். உடனுக்குடன் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதை சற்றுத்தள்ளிப் போடுங்கள்.
மீனம்
இந்த வாரம் புதிய தொடர்புகள் மூலம் பல சிக்கல்கள் அகலும். வாக்கு ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் தன வரவை தருவார். அரசு உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். பள்ளி கல்லூரி மாணவர்கள் கூடுதல் கவனத்தோடு பாடங்களை படிக்க வேண்டும். பூஜையில் இருப்பதில் மனம் ஈடுபடும். மனதில் இருக்கும் சுமைகளை இறக்கி வைக்க ஒரு நபர் கிடைப்பார். பேச்சில் கடுமை குறைந்து இனிமை தவழும். அதனால் குடும்பத்தில் சற்று குழப்பங்கள் விலகும். விரோதங்கள் அதிகரிக்கலாம். எனவே நீங்களாகவே எதிலும் முன் கருத்து சொல்ல வேண்டாம். கேட்டால் தவிர வாயைத் திறக்க வேண்டாம். வேலை மாற்றங்கள் வரலாம்.
இதனையும் படியுங்கள் : 2025 ராகு கேது பெயர்ச்சியால் தலைவிதி மாறப்போகும் ஐந்து ராசிக்காரர்கள்!!