மே 18ஆம் தேதி மாலை 5:08 மணிக்கு ராகு கேது பெயர்ச்சி நடக்கப் போகிறது. இந்த பயிற்சியின் போது ராகு பகவான் மீனராசிகளிலிருந்து பூரட்டாதி நட்சத்திர 4ம் பாதத்தில் இருந்து கும்ப ராசியில் பூரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதத்திற்கு செல்ல போகிறார். கேது பகவான் கன்னி ராசியில் உள்ள உத்திரம் நட்சத்திர இரண்டாம் பாதத்தில் இருந்து சிம்ம ராசியில் உள்ள உத்திர நட்சத்திர 1ஆம் பாதத்திற்கு பெயர்ச்சியாக போகிறார். இந்த பெயர்ச்சி ஏழையை மிகப்பெரிய பணக்காரராக்கும் அளவிற்கு ஒரு சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளை அள்ளித் தரப்போகிறது அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுன ராசி

மிதுன ராசிக்கு மூன்றாம் வீட்டில் கேது பகவான் பெயர்ச்சியாக போகிறார். ராகு பகவான் மிதுன ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பெயர்ச்சியாக போகிறார். இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு வீரமும் தைரியமும் அதிகரிக்கும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் கடினமாக உழைத்து அதன் மூலம் மற்றவர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள். உறவினர்களின் நண்பர்களுடன் ஆன்மீக சுற்றுலா செல்வதில் ஆர்வமுடன் இருப்பீர்கள். மேலும் அந்தப் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களையும் கொடுக்கும். நேர்மறையான எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றுவதால் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் சக ஊழியர்களுடைய ஆதரவு கிடைக்கும். வீட்டில் உடன் பிறந்தவர்களுடைய உதவியும் கிடைக்கும் சொத்து வாங்கும் அளவிற்கு உங்களுக்கு உதவி கிடைக்கும். வணிக ரீதியாக பல சவால்களை எதிர்கொள்ள தயாராகுவீர்கள்.
கன்னி ராசி

கேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்க கூடிய காலகட்டத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு பழைய கடன்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் இந்த நேரத்தில் நாள்பட்ட நோயிலிருந்து தப்பிப்பீர்கள். நீதிமன்ற வழக்கு பழைய தகராறு போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு அதில் வெற்றியையும் பெறுவீர்கள். பணத்தின் நகர்வு உங்களிடத்தில் அதிகமாகவே இருக்கும். கேது பகவானின் சஞ்சாரத்திற்கு பிறகு வேலை மற்றும் வணிகத்தில் பிரச்சனைகள் அதிக அளவில் இருக்காது பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள்.
துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் கேது பகவானும் ஐந்தாம் வீட்டில் ராகு பகவானும் சஞ்சரிக்க போவதால் சாதகமான நல்ல நிலை ஏற்படும். கேது பகவானின் பெயர்ச்சி அதிக பண சம்பாத்தியத்திற்கான வாய்ப்புகளை கொடுக்கும். உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் காதல் உறவில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. கொஞ்சம் விட்டுக்கொடுத்து போனால் திருமண வாழ்க்கையில் நன்றாக வாழலாம். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் மூத்த அதிகாரிகள் உடைய ஆதரவை பெறுவீர்கள். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி பல அதிர்ஷ்டங்களை கொடுக்கக்கூடியது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் மற்றும் மன வலிமையை அதிகரித்துக் கொள்வதற்கு தினமும் யோகா தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். ஆன்மீகப் பயணம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். தொழில் தொடர்பாகவும் வியாபாரம் சம்பந்தமாகவும் நீங்கள் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். வருமானம் குறைவாக இருந்தாலும் நிறைவான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
மகர ராசி

மகர ராசிக்காரர்கள் எதிர்பாராத பல பண ஆதாயங்களை பெறுவீர்கள். உடல் நலம் தொடர்பான சிரமங்கள் முடிவுக்கு வரலாம். வாழ்க்கையில் சில நேர்மறையான விளைவுகளை பெறுவீர்கள். நிதி மற்றும் முதலீடு விஷயங்களில் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களும் இந்த காலகட்டத்தில் நல்ல வாய்ப்பை பெறலாம். கேதுவின் அமைப்பு பொன்னானதாக அமைந்திருப்பதால் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றமும் ஏற்படும். ஆனால் சற்று போராட வேண்டி இருக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : சுக்கிரன் வக்ர நிவர்த்தி! சற்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!