வீட்டில் அனைவரும் ஆச்சர்யபடும் வகையில் காடை குழம்பு இப்படி செஞ்சி கொடுங்க! அப்புறம் பாராட்டு மழை தான்!

காடை குழம்பு தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. காடை குழம்பு பரோட்டா, தோசை, மற்றும் இட்லிக்கு ஒரு அசத்தலான சைடிஷ் ஆக இருக்கும். ஆனால் பரோட்டா காடை குழம்பு காம்பினேஷன்க்கு பலரின் மத்தியில் ஒரு தனி வரவே

By Prem Kumar · 8/11/2023

காடை குழம்பு தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. காடை குழம்பு பரோட்டா, தோசை, மற்றும் இட்லிக்கு ஒரு அசத்தலான சைடிஷ் ஆக இருக்கும். ஆனால் பரோட்டா காடை குழம்பு காம்பினேஷன்க்கு பலரின் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது என்றால் அது மிகையல்ல. சன்டே போன்ற வார விடுமுறை தினங்களில், நாம் அனைவரும் வழக்கமாக அசைவ உணவுகளை சமைத்தோ அல்லது வெளியில் ஆர்டர் செய்தோ குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்வோம்.

அப்படி நாம் சமைக்கும் உணவுகளில் , அநேகமாக மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் கிரேவி போன்ற உணவுகள் தான் அதிகமாக இருக்கும். நீங்கள் சற்று வித்தியாசமாக அசைவ உணவை செய்து சுவைக்க நினைத்தால், அதற்கு தென்இந்திய ஸ்பெஷல் ரெசிபியான காடை குழம்பு சிறந்த தேர்வாக இருக்கும். இன்று வித்தியாசமாக, காடை குழம்பு செய்து சாப்பிடலாமா? இதனை பிரியாணி, நாண், சப்பாத்தி என் அனைத்திற்கும் வைத்து சாப்பிடும் விதத்தில் சுவை அருமையாக இருக்கும்.

வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பிசாப்பிட்டு அடிக்கடி செய்யுமாறு கேட்பார்கள். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். காடையில் மிகக் குறைவான கொலஸ்ட்ராலும், கோழியைவிடக் கூடுதல் உயிர்ச்சத்துப் பயனும் உள்ளது. குறைந்த கொழுப்புள்ள காடை, கோழி பிரியர்களுக்கு பரிசு. இதை வெறுமனே ரசித்து உண்பதற்கும் ஒரு கூட்டமே இருக்கத்தான் செய்கிறது. வழக்கமாக மட்டன், சிக்கன், மீன் என எப்போதும் ஒரே மாதிரியே சாப்பிடும் நீங்கள் இந்த காடை குழம்பை ட்ரை பண்ணி பாருங்கள்.

Recipes AMP · Quick view
View full