Advertisement
சைவம்

பஞ்சு போன்ற மென்மையான கடலை மாவு இட்லி இப்படி செய்து பாருங்க ? இதன் ருசியே தனி தான்!

Advertisement

காலை உணவுக்கு உகந்த உணவு என வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை சொன்ன உணவு தான் இட்லி. நமது வாழ்வில் பாரம்பரிய உணவுகளில் இட்லியும் ஒன்றாக பல ஆண்டுகளாக உணவுகளில் வருகிறது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் அதிகபட்ச உணவு பொருள் என்றால் அது இட்லி தான் இருந்தாலும். இட்லி போன்ற உணவுகள் நம் உடலில் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் அதனால் நமது ஆரோக்கியமும் மேம்படும்.

இதையும் படியுங்கள் : மல்லிகை பூ போன்ற கோதுமை ரவா இட்லி செய்வது எப்படி ?

Advertisement
Advertisement

ஏனென்றால் அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று கடலை மாவு இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். காலை நேரங்களில் திடீரென்று இட்லி செய்ய வேண்டும் என்றால் மாவுல்லாமல் தவிக்காதீர்கள் உடனடியாக இந்த கடலை மாவு இட்லியை செய்து அசத்துங்கள் . மேலும் சுவையான கடலை மாவு இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கடலை மாவு இட்லி | Kadalai Maavu Idli Recipe in Tamil

Print Recipe
அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று கடலை மாவு இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். காலை நேரங்களில் திடீரென்று இட்லி செய்ய வேண்டும் என்றால் மாவுல்லாமல் தவிக்காதீர்கள் உடனடியாக இந்த கடலை மாவு இட்லியை செய்து அசத்துங்கள் . மேலும் சுவையான கடலை மாவு இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Breakfast
Cuisine Indian, TAMIL
Keyword kadalai mavu idli, கடலை மாவு இட்லி
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 2 People
Calories 387

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய தட்டு

Ingredients

  • 2 கப் கடலை மாவு
  • 2 tbsp ரவா
  • 1 pinch பெருங்காயத்தூள்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 ½ tbsp உப்பு
  • 1 tbsp எண்ணெய்
  • ½  tbsp சோடா உப்பு

Instructions

  • முதலில் தேவையான அளவு கடலை மாவு எடுத்துக் கொள்ளுங்கள் கடலை மாவை சலித்து பயன்படுத்தினால் இட்லி மிருதுவாக வரும். அதனால் ஒரு பெரிய பவுளில் அரிப்பை வைத்து கடலை மாவை முதலில் சலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு சலித்து எடுத்த கடலை மாவுடன் ரவா மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து
    Advertisement
    கொள்ளுங்கள். அதன் பின் ஒரு துண்டு இஞ்சி மற்றும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு இடித்து கொண்டு மாவுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
  • அதன் பின் மஞ்சள் தூள் மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்.
  • இட்லி மாவு அதிக கெட்டியாகவும் இருக்கக் கூடாது, தண்ணீர் பதமாகவும் இருக்கக் கூடாது எப்போதும் இட்லி மாவு ஊற்றும் பதத்திற்கு மாவை தயார் செய்து கொள்ளுங்கள். பின்பு இதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • எண்ணெய் ஊற்றிய பின் நன்கு கலந்து கொண்டு இதனுடன் சிறிது சோடா உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் இட்லி மென்மையாக வரும் இப்போ இப்பொழுது மாவை நன்றாக ஒரு நிமிடம் அடித்துக் கொண்டே இருங்கள்.
  • பின்பு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் சூடேறியதும் இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லியை ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பின் இட்லி பாத்திரத்தில் ஆவி வந்ததும் இட்லியை எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் ருசியான கடலை மாவு இட்லி தயார்கிவிட்டது.

Nutrition

Calories: 387kcal | Carbohydrates: 58g | Protein: 22g | Saturated Fat: 0.7g | Sodium: 64mg | Potassium: 846mg | Fiber: 11g | Sugar: 11g

English Overview: kadalai mavu idli is one of the most important dishes in india. kadalai mavu idli recipe or kadalai mavu idli seivathu eppadi or kadalai mavu idli in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

2 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

3 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

4 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

6 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

6 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

8 மணி நேரங்கள் ago