சிம்பிளான கடலைப்பருப்பு துவையல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!
தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு உணவு எப்போதும் இட்லி அல்லது தோசையாகத்தான் இருக்கும். இட்லி, தோசைக்கு எளிதில் செய்யக்கூடிய சரியான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னி அல்லது தக்கா
தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு உணவு எப்போதும் இட்லி அல்லது தோசையாகத்தான் இருக்கும். இட்லி, தோசைக்கு எளிதில் செய்யக்கூடிய சரியான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னிதான். எனவே எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்யாமல் சற்று வித்தியாசமாக கடலைப்பருப்பு துவையல் செய்யுங்கள். இந்த கடலைப்பருப்பு துவையலானது மிகவும் எளிதாக செய்யக்கூடிய அதேசமயம் சுவையான துவையலாகும்.
இந்த கடலைப்பருப்பை அதிகம் சாப்பிடுவதன் மூலமாக தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் எளிதில் குணமாகும். மேலும், இதில் திசுக்கள், எலும்புகள், தசைகள் உருவாக்கத்திற்கு முக்கியமான புரதசெல் அதிகமாக உள்ளது. கடலை பருப்பு உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு ஆற்றல், உடல் எடையை குறைக்க, தலைமுடி உதிர்வை தடுக்க என பல நன்மைகளை கொடுக்கும். இதனால் வாரம் ஒருமுறையேனும் ஒரு வேளை உணவில் இந்த கடலை பருப்பு துவையலை சேர்த்து கொள்ளலாம்.
இந்த துவையல் கார சாரமாக கஞ்சி, புளி சாதம், தயிர் சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும். எளிதில் ஜீரணமாகும். விருப்பம் உடையவர்கள் இதில் தண்ணீர் கலந்து சட்னியாக மாற்றி கடுகு உளுந்து சின்ன வெங்காயம் கறி வேப்பிலை கலந்து தாளித்து இட்லிக்கு சட்னியாகவும் சாப்பிடலாம். பொதுவாக கடலைப்பருப்பில் பலவகையான உணவுகள் இருந்தாலும், அதில் கடலைப்பருப்பு துவையல் தனிசுவை தான். இப்போது சுவையான கடலைப்பருப்பு துவையல் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கத்திரிக்காய் வைத்து இந்த மாதிரி ஒரு தடவை துவையல் செஞ்சு பாருங்க!!