- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
கத்திரிக்காய் வாங்குனா அதுல கத்திரிக்காய் புளிக்குழம்பு, கத்திரிக்காய் பொரியல், கத்தரிக்காய் பச்சடி இதெல்லாம் செஞ்சிருப்பீங்க ஆனா கத்திரிக்காய் வெச்சு இந்த மாதிரி ஒரு சூப்பரான துவையல் ஒரு தடவை செஞ்சு பாருங்க. இந்த கத்திரிக்காய் துவையலை சுட சுட சாதத்தில் போட்டு நெய் இல்லனா நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியா இருக்கும். ருசியான இந்த ரெசிபிக்கு சைடிஸ் கூட தேவைப்படாது. சூப்பரா இருக்கும் தேவைப்பட்டால் அப்பளம் கூட பொறித்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த துவையல் வைத்து சாதத்தில் போட்டு பிசைந்து கொடுத்து விடலாம்.
குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிட்டு வருவாங்க. கத்திரிக்காய் இருக்கக்கூடிய சத்துக்கள் உடம்புக்கு ஆரோக்கியமானது ஒரு சிலருக்கு கத்திரிக்காய் சுத்தமாக பிடிக்காது. அந்த மாதிரி பிடிக்காதவங்களுக்கு இந்த மாதிரி ஒரு துவையல் செஞ்சு கொடுங்க கத்திரிக்காய் இருக்க கூடிய சத்துக்கள் உடம்புல போய் சேரும். டேஸ்ட்டும் அட்டகாசமாகவே இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியா குழம்பு கூட்டு பொரியல் அப்படின்னு செஞ்சு சாப்பிட போரடித்ததுன்னா இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரான துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க வேலையும் மிச்சமாகும்.
15 நிமிஷத்துல இந்த துவையல் ரெடியாகி விடும். இந்த துவையலை ரசம் சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் எல்லாத்துக்கும் கூட சைடு டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். லெமன் சாதம் புளி சாதத்துக்கு கூட தொட்டுக்கலாம் டேஸ்ட் சூப்பராக இருக்கும். இட்லி தோசை சப்பாத்திக்கு கூட இதை சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். காரசாரமா புளிப்பா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான கத்திரிக்காய் துவையல் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கத்திரிக்காய் வாங்கினா ஒரு தடவ இந்த எண்ணெய் கத்திரிக்காய் செஞ்சு பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து 4 காய்ந்த மிளகாய் மல்லி விதைகள் சீரகம் பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு புளி உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கியதும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து வதக்கவும்.
அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு,கருவேப்பிலை, தட்டிய பூண்டு நறுக்கிய சின்ன வெங்காயம் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி அரைத்து வைத்ததில் சேர்த்து விட்டால் சுவையான கத்திரிக்காய் தொக்கு தயார்.






