- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
கத்திரிக்காய் சாப்பிடுவது ஒரு சிலருக்கு தான் பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு கத்திரிக்காய் சாப்பிடவே பிடிக்காது காரணம் கத்திரிக்காய் நிறைய சாப்பிட்டா அலர்ஜி வரும். ஆனா கத்திரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு சில நன்மைகளும் கிடைக்கும். இந்த கத்திரிக்காய் வச்சு நம்ம கத்திரிக்காய் புளிக்குழம்பு எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு கத்திரிக்காய் கிரேவி பிரியாணிக்கு கத்திரிக்காய் பச்சடி அப்படின்னு நிறைய செஞ்சு இருப்போம்.
ரொம்பவே சிம்பிளான ஈஸியா செய்யக்கூடிய இந்த எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டோம் ஒரு சிலர் செஞ்சு சாப்பிட்டு இருக்கலாம் ஆனால் நிறைய பேரு இதை சாப்பிட்டு இருக்கவே மாட்டோம். கத்திரிக்காயை பிடிக்கலைன்னு சொல்றவங்க கூட இந்த எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் வைத்து கொடுத்தால் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க ரசம் சாதம் காரக்குழம்பு சாம்பார் அப்படின்னா எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இந்த எண்ணெய் கத்திரிக்காய் இருக்கும்.
ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு செய்ற இந்த எண்ணெய் கத்திரிக்காய் நிறைய பேருக்கு ஃபேவரட்டா கூட மாறிடலாம். அந்த அளவுக்கு இந்த எண்ணெய் கத்திரிக்காய் சாப்பிடுவதற்கு டேஸ்ட்டா இருக்கும்.வீட்ல கத்திரிக்காய் நிறைய இருந்தா ஒரு தடவை இந்த எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் ட்ரை பண்ணி சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க அடிக்கடி இதை செய்வீங்க. சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் கூட இதை ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் ரொம்ப சிம்பிளா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : அடுத்தமுறை கத்திரிக்காய் லாங்கினால் இந்த மாதிரி செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும்
இப்பொழுது ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிய பிறகு கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
எண்ணெய் கொஞ்சம் தாராளமாக சேர்த்த கத்திரிக்காயை எண்ணெயிலேயே சுருள வதக்கவும்
சிறிதளவு உப்பு சேர்த்து கத்திரிக்காய் எண்ணெயிலேயே நன்கு வெந்து வந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் சுவையான எண்ணெய் கத்திரிக்காய் தயார்






