Home சைவம் அடுத்தமுறை கத்திரிக்காய் லாங்கினால் இந்த மாதிரி செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க!

அடுத்தமுறை கத்திரிக்காய் லாங்கினால் இந்த மாதிரி செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க!

கத்திரிக்காய் அப்டின்னாலே நிறைய பேருக்கு சுத்தமா பிடிக்காது. கத்திரிக்காய் சாப்பிட்டால் ஒரு சிலருக்கு உடம்புல அரிப்பு ஏற்படும் அதனால ஒரு சிலருக்கு கத்திரிக்காய் அலர்ஜியா இருக்கும் ஆனா ஒரு சிலருக்கு இந்த கத்திரிக்காயை எதுக்கு புடிக்கலைன்னு தெரியாது ஆனால் அவங்க அதை சாப்பிடவே மாட்டாங்க. ஆனா இந்த கத்திரிக்காய் வச்சு நம்ம எக்கச்சக்கமான உணவுகளை செய்ய முடியும்.

-விளம்பரம்-

அதுலயும் எண்ணெய் கத்திரிக்காய் பொரியல், எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, கத்திரிக்காய் கார குழம்பு அப்படின்னா இந்த மாதிரியான உணவுகள் எல்லாமே கத்திரிக்காய் வச்சு சாப்பிடும்போது ரொம்ப வெயிட் டேஸ்ட்டா இருக்கும் ஆனா அது ஒரு சிலருக்கு மட்டும் தான் பிடிக்கும் அதை தவிர எல்லாருமே கத்திரிக்காய் விரும்பி சாப்பிடணும் அப்படின்னா இப்ப நம்ம செய்ய போற இந்த செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல உங்க வீட்டுல செஞ்சு பாருங்க.

ஒரு தடவை நீங்க செஞ்சு கொடுத்தா போதும் அவங்களே திரும்பவும் கேட்பாங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல நம்ம தயிர் சாதம் கூட வச்சு சாப்பிட்டா அதைவிட வேற சொர்க்கமே கிடையாதுங்க அந்த அளவுக்கு ரொம்பவே சூப்பரா இருக்கும். தயிர் சாதத்துக்கு கூட மட்டுமில்லாமல் புளி சாதம் லெமன் சாதம் ஏன் வெறும் சுடு கஞ்சிக்க கூட இந்த கத்திரிக்காய் வறுவல வச்சு சாப்பிட்டோம் அப்படின்னா ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடலாம் அந்த அளவுக்கு ருசியா இருக்கும்.

அதுலயும் நம்ம இதுல பிரெஷா மசாலாவை அரைச்சு செய்றதால இதோட வாசனை ரொம்ப சூப்பரா இருக்கும். பக்கத்துல இருக்கிற நாலு வீட்டுக்கும் இதோட வாசனை போகும் அப்படினா பாத்துக்கோங்க அந்த அளவுக்கு இதோட மணம், ருசி எல்லாமே சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பாரம்பரியமான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
3 from 3 votes

செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் | Chettinadu Brinjal Fry

கத்திரிக்காய் அப்டின்னாலே நிறைய பேருக்கு சுத்தமா பிடிக்காது. கத்திரிக்காய் சாப்பிட்டால் ஒரு சிலருக்கு உடம்புல அரிப்பு ஏற்படும் அதனால ஒரு சிலருக்கு கத்திரிக்காய் அலர்ஜியா இருக்கும் ஆனா ஒரு சிலருக்கு இந்த கத்திரிக்காயை எதுக்கு புடிக்கலைன்னு தெரியாது ஆனால் அவங்க அதை சாப்பிடவே மாட்டாங்க. பக்கத்துல இருக்கிற நாலு வீட்டுக்கும் இதோட வாசனை போகும் அப்படினா பாத்துக்கோங்க அந்த அளவுக்கு இதோட மணம், ருசி எல்லாமே சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பாரம்பரியமான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Chettinadu Brinjal Fry
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 5 கத்தரிக்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ஸ்பூன் தனியா
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 2 கொத்து கருவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு மிளகு கறிவேப்பிலை தனியா அனைத்தும் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்து வைத்ததை நன்றாக ஆரவைத்த ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பெரிய கத்தரிக்காய்களை வாங்கி அதனை கொஞ்சம் தடிமனாக வட்ட வடிவில் நறுக்கி தண்ணீரில் போட்டு கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் அரைத்து வைத்துள்ள மசாலா தேவையான அளவு உப்பு கடலை மாவு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • இந்த கலவையை கத்திரிக்காயின் மேல் தடவி ஒரு அரை மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
  • அரை மணி நேரத்திற்கு பிறகு ஒரு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி கத்திரிக்காயை அதன் மேல் வைத்து இருபுறமும் சிவக்க பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல் தயார்.
  • நாம் இதில் வறுத்து அரைத்த மசாலாவை சேர்த்துள்ளதால் இதனுடைய சுவை சற்று அதிகமாகவே இருக்கும். இதனை கலவை சாதங்களுக்கு வைத்து சாப்பிடும் பொழுது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 9g | Protein: 1.2g | Sodium: 12mg | Potassium: 311mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : கொங்கு கத்திரிக்காய் கிரேவி இப்படி செய்தால் வெரைட்டி ரைஸ், ரொட்டி சப்பாத்தி எல்லாத்துக்குமே இது அட்டகாசமான காம்பினேஷன்!

-விளம்பரம்-