கொங்கு கத்திரிக்காய் கிரேவி இப்படி செய்தால் வெரைட்டி ரைஸ், ரொட்டி சப்பாத்தி எல்லாத்துக்குமே இது அட்டகாசமான காம்பினேஷன்!

- Advertisement -

கத்திரிக்காய் ஒரு சிலருக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது. ஆனா அதே கத்தரிக்காய எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைத்து கொடுத்தால் கொஞ்ச பேருக்கு பிடிக்கும். இந்த கத்திரிக்காயில் நிறைய சத்துக்கள் இருக்கு. கத்திரிக்காய் சாப்பிட்டால் அரிப்பு போன்ற பிரச்சனைகள் வரும் அப்படின்னு சொல்லுவாங்க ஆனா கத்திரிக்காய் சாப்பிட்டால் நம்ம உடம்புக்கு சில நன்மைகளும் உண்டாகும்.

-விளம்பரம்-

இப்போ நிறைய பேருக்கு பெரிய கத்திரிக்காய் பண்ணி கொடுத்தா ரொம்பவே பிடிக்குது. அதே மாதிரி கொங்கு ஸ்டைல்ல ஒரு அருமையான கத்திரிக்காய் கிரேவி எப்படி செய்வது என்று நாம் பார்க்கலாம் நீங்க பல கத்திரிக்காய் கிரேவி சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த கத்திரிக்காய் கிரேவி கொஞ்சம் ஸ்பெஷலா டேஸ்ட்டும் அருமையா இருக்கும்.

- Advertisement -

இட்லி தோசை வெரைட்டி ரைஸ் வெறும் சாதம் வைத்து சாப்பிடலாம் கத்திரிக்காய் பிடிக்காதவங்களுக்கும் ரொம்பவே பிடிச்சு போயிடும் அந்த அளவுக்கு ஒரு அருமையான கொங்கு கத்திரிக்காய் கிரேவி எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்

Print
3.29 from 7 votes

கொங்கு கத்திரிக்காய் கிரேவி | Kongu Brinjal Gravy Recipe In Tamil

கத்திரிக்காய்ஒரு சிலருக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது. ஆனா அதே கத்தரிக்காய எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைத்து கொடுத்தால் கொஞ்ச பேருக்கு பிடிக்கும். இந்த கத்திரிக்காயில் நிறைய சத்துக்கள் இருக்கு. கத்திரிக்காய் சாப்பிட்டால் அரிப்பு போன்ற பிரச்சனைகள் வரும் அப்படின்னு சொல்லுவாங்க ஆனா கத்திரிக்காய் சாப்பிட்டால் நம்ம உடம்புக்கு சில நன்மைகளும் உண்டாகும். அந்த அளவுக்கு ஒரு அருமையான கொங்கு கத்திரிக்காய் கிரேவி எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH, Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Kongu Brinjal Gravy
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ கத்திரிக்காய்
  • 300 கிராம் வெங்காயம்
  • 200 கிராம் தக்காளி
  • 1 குழி கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 கைப்பிடி அளவு புதினா இலைகள்
  • 1 கைப்பிடி அளவு மல்லி இலைகள்
  • கறிவேப்பிலை தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 20 கிராம் சோம்பு
  • 30 கிராம் சீரகம்
  • 3 ஏலக்காய்
  • 6 பட்டை
  • 6 கிராம்பு
  • 7 முந்திரி
  • 3 டேபிள் ஸ்பூன் கறி மசாலா
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 25 கிராம் மிளகாய் தூள்

செய்முறை

  • கத்திரிகாய்களை பெரிய துண்டுகளாக வெட்டி ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கத்திரிக்காய்களை பொரித்து வெந்தவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் இரண்டு பட்டை 7 ஏலக்காய் 10 கிராம் சோம்பு 15 கிராம் சீரகம் வெங்காயம் முந்திரி தக்காளி அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். ஆரியவுடன் அதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது மறுபடியும் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சிறிதளவு சோம்பு சேர்த்து பொரிந்த உடன் கறிவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்த உடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  • இப்பொழுது அதில் புதினா மற்றும் மல்லி இலைகளை சேர்த்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள கலவையும் சேர்த்து அதனுடன் கத்திரிக்காயையும் சேர்த்து நன்றாக ஒரு ஐந்து நிமிடங்களுக்கு வதக்கிக் கொள்ளவும்.
  • இறுதியாக சிறிதளவு மல்லி இலைகளை தூவி இறக்கினால் ஒரு அருமையான கொங்கு கத்திரிக்காய் கிரேவி தயார். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த அசைவ கத்திரிக்காய் கிரேவியை செய்து கொடுத்து மகிழுங்கள்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 9g | Protein: 12g | Fat: 2g