தொட்டதெல்லாம் வெற்றியாக, கடனிலிருந்து விடுபட தேய்பிறை சஷ்டி வழிபாடு
அதிகமானவர்களால் விரும்பப்படும் தெய்வமாக இருப்பவர் தமிழ் கடவுளான முருகப் பெருமான் ஆவார். முருகா என்று ஒரு முறை அழைத்தால் வந்த வினைகளும், வரவிருக்கும் துன்பங்களும் ஓடி விடும் என்பார்கள். முருகா என்ற சொல்லே மந்திரமாக கருதப்படுவதால், முருகா என்று மனதில் நினைத்தாலும் துன்பங்கள் அனைத்
அதிகமானவர்களால் விரும்பப்படும் தெய்வமாக இருப்பவர் தமிழ் கடவுளான முருகப் பெருமான் ஆவார். முருகா என்று ஒரு முறை அழைத்தால் வந்த வினைகளும், வரவிருக்கும் துன்பங்களும் ஓடி விடும் என்பார்கள். முருகா என்ற சொல்லே மந்திரமாக கருதப்படுவதால், முருகா என்று மனதில் நினைத்தாலும் துன்பங்கள் அனைத்தும் மறைந்து போகும் என்பது நம்பிக்கை. முருகப்பெருமான் வழிபாட்டிற்கென சில நாட்கள் உகந்ததாக சொல்லப்படுகிறது. அது ஒவ்வொரு வாரத்தில் வரக் கூடிய செவ்வாய்க்கிழமையில் வழிபடுவது நல்ல பலனை கொடுக்கும்.
அது மட்டும் இன்றி நட்சத்திர வழிபாடு உண்டு. திதிகளில் சஷ்டியும், நட்சத்தரிங்களில் கார்த்திகை நட்சத்திரமும் முருகனை வழிபட உகந்த நாட்களாகும். தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்தால் துன்பங்கள் அனைத்தும் தேய்ந்து போகும் என்பது ஐதீகம். முருகனுக்குரிய தேய்பிறை சஷ்டியில் வழிபட்டால் கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, பொருளாதார நிலை என்பது உயரும். வாழ்வில் அனைத்து பலன்களும் ஏற்படும். சஷ்டி நாளில் முருகனை எப்படி வழிபடலாம் என்றும், பண பிரச்சினைகள் தீர என்ன பரிகாரம் செய்யலாம் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம் தெரிந்து கொள்ளலாம்.
சஷ்டி வழிபாடு
ஐப்பசி பிறந்து விட்டால் ஆறுமுகனுக்கு விழா எடுக்கும் நாள் சஷ்டி திதியாகும். சஷ்டி திதி என்பது ஆறாவது திதியாகும். ஆறுமுகனுக்கு ஆறாவது திதியில், ஐப்பசியில் எடுக்கும் இந்த விழாவில் நாம் கலந்து கொண்டாலோ அல்லது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டாலோ திருமண வாய்ப்பு கைகூடி வரும். ‘சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்று மாற்றம் பெற்றுவிட்டது. அதன் உண்மையான விளக்கம் சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால், ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும்.
சஷ்டி தினத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வது மிகவும் எளிதானது தான். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருட்கள் இரண்டு நெல்லிக்காய்களும், நெய்யும் மட்டும் தான். தேய்பிறை சஷ்டியில் எப்போதும் போல் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்து விட்டு, முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, செவ்வரளி பூவால் அர்ச்சனை செய்யவும். பின் நெல்லிக்காய்களில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு, நடுவில் குழி செய்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி திரி போட்டு, விளக்கேற்ற வேண்டும். அது போல் இரண்டு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இந்த விளக்கு நீண்ட நேரம் எரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை, இரண்டு நிமிடங்கள் எரிந்தால் கூட போதும். இந்த பொருட்களை பயன்படுத்தி விளக்கேற்றுவதால் அஷ்டலட்சுமிகளின் கடாட்சமும் வீட்டில் எப்போதும் நிறைந்திருக்கும். இதனால் வீட்டில் பணத்தட்டுப்பாடு என்பது எப்போதும் ஏற்படாது.
பிரச்சினைகள் தீர சஷ்டி விரதம்
முருகப் பெருமானுக்குரிய விரத நாளாக சஷ்டி திதி சொல்லப்படுகிறது. பெளர்ணமியில் இருந்து வரும் ஆறாவது நாள் சஷ்டி திதியாகும். தேய்பிறை சஷ்டி விரதம் கடைபிடிக்க விரும்புபவர்கள், அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, வீட்டில் உள்ள முருகப் பெருமானின் படத்திற்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து விட்டு, தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும். காலையில் பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் இருந்து முருகனை வழிபட வேண்டும். மாலையில் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். இவ்வாறு நாம் விரதமிருந்து முருகனை வழிபடும் போது பண பிரச்சினைகள் மட்டுமின்றி அனைத்து பிரச்சினைகளும் பரந்தோடி விடும்.
சஷ்டி அன்று செய்ய கூடாதவை
எக்காரணம் கொண்டும் தேய்பிறை சஷ்டி அன்று வீட்டில் அசைவம் சமைக்கக்கூடாது. வெளியில் சென்றும் சாப்பிட கூடாது. சஷ்டி அன்று யாரிடமிருந்தும் எந்தவித பொருளையும் கடனாக வாங்க கூடாது. அது பணமாக இருந்தாலும் சரி நகையாக இருந்தாலும் சரி எதையும் கடனாக வாங்காமல் இருப்பது நல்லது. தேய்பிறை சஷ்டியில் தங்களிடம் இருக்கும் நகையை அடமானம் வைத்து பணம் வாங்க கூடாது.
இதனையும் படியுங்கள் : கேட்ட வரம் முருகப்பெருமானை நினைத்து 48 நாட்கள் விரதம் இருந்து வழிபட்டுக் கொண்டால் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்!