ருசியான கலாக்காய் ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்கய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!

- Advertisement -

அடிக்கிற வெயிலுக்கு கண்டிப்பா நம் வீடுகளில் வாரத்திற்கு 2 முறை தயிர் சாதம், மோர் சாதம் செய்வது நிச்சயம். அதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய் சூப்பரான காமினேஷன். ஒவ்வொரு முறையும் கடையில் வாங்கினால் சரியா வருமா? அதற்கு மொத்தமாக ஒரே டைமில் 2 மாதத்துக்கு தாங்கும் அளவுக்கு சூப்பரான கலாக்காய் ஊறுகாய் வீட்டிலே செய்து வைத்துக் கொள்ளலாம். தேவையான நேரத்தில் எடுத்து யூஸ் பண்ணிக்கலாம். அதிலும் கடைகளில் விற்கப்படும் ஊறுக்காய் போல் அல்ல, கல்யாண வீட்டு பந்தியில் பரிமாறுக்கப்படும் தொக்கு போலான ஊறுகாய்.

-விளம்பரம்-

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக இல்லாதிருந்தாலும் கூட ஊறுகாய் எப்போதும் கிடைக்கிறது. மாங்காய், எலுமிச்சை முதல் சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்டு, மீன் மற்றும் கோழி என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் ஊறுகாய் செய்கிறோம். நம் அனைவருக்கும் கலாக்காய் என்றாலே புளிப்பு மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் கலாக்காயில் பலவிதமான சுவையான ரெசிபிக்களை செய்யலாம்.

- Advertisement -

இதனை தயாரிக்க நமக்கு கடுகு, சோம்பு, வெந்தயம் போன்றவை தேவைப்படுகிறது. இவற்றை தவிர, உப்பு, மஞ்சள் தூள், சிகப்பு மிளகாய் தூள், பெருங்காயம் மற்றும் கடுகு எண்ணெய் போன்றவையும் இந்த காரமான ஊறுகாயை தயாரிக்க பயன்படுகிறது. இவை அனைத்தும் வாசனையை நமக்கு தருவதோடு, சுவையையும் சேர்த்து தருகிறது. அந்த வகையில் இன்று கலாக்காயை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

Print
5 from 1 vote

கலாக்காய் ஊறுகாய் | kalakkai pickle recipe in tamil

அடிக்கிற வெயிலுக்கு கண்டிப்பா நம் வீடுகளில் வாரத்திற்கு 2 முறை தயிர் சாதம், மோர் சாதம் செய்வது நிச்சயம். அதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய் சூப்பரான காமினேஷன். ஒவ்வொரு முறையும் கடையில் வாங்கினால் சரியா வருமா? அதற்கு மொத்தமாக ஒரே டைமில் 2 மாதத்துக்கு தாங்கும் அளவுக்கு சூப்பரான கலாக்காய் ஊறுகாய் வீட்டிலே செய்து வைத்துக் கொள்ளலாம். தேவையான நேரத்தில் எடுத்து யூஸ் பண்ணிக்கலாம். அதிலும் கடைகளில் விற்கப்படும் ஊறுக்காய் போல் அல்ல, கல்யாண வீட்டு பந்தியில் பரிமாறுக்கப்படும் தொக்கு போலான ஊறுகாய். ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக இல்லாதிருந்தாலும் கூட ஊறுகாய் எப்போதும் கிடைக்கிறது. அந்த வகையில் இன்று கலாக்காயை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Pickle
Cuisine: Indian
Keyword: kalakkai pickle
Yield: 4 People
Calories: 65kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 200 கி கலாக்காய்
  • 25 வர ‌மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு                             
  • நல்எண்ணெய்‌ தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கலாகாய்களை நன்கு தண்ணீரில் அலசி ஒரு துணியில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும். நீங்கள் விருப்பப்பட்டால் இதனை இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றல், உப்பு, கடுகு, வெந்தயம் இவற்றை நன்கு வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு பொடித்து வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கலாகாய்களை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • இவை வதங்கிய பிறகு பொடித்து வைத்துள்ள பவுடரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • எல்லாம் ஒன்று சேர்ந்து நன்கு கலந்து வந்தவுடன் இறக்கி ஆற வைத்து கண்ணாடி பாட்டிலில் வைத்து கொள்ளுங்கள்.
  • அவ்வளவுதான் கலாக்காய் ஊறுகாய் தயார். இது தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.

Nutrition

Serving: 300g | Calories: 65kcal | Carbohydrates: 17g | Protein: 2.5g | Fat: 0.3g | Sodium: 16mg | Potassium: 156mg | Fiber: 1.8g | Vitamin A: 765IU | Vitamin C: 27.7mg | Calcium: 14mg | Iron: 1.3mg