Home சைவம் உடலுக்கு ஆரோக்கியமான சுவையான கம்பு இனிப்பு அடை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து...

உடலுக்கு ஆரோக்கியமான சுவையான கம்பு இனிப்பு அடை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

எல்லாருக்குமே ஸ்நாக்ஸ் சாப்பிடுவது என்றால் ரொம்பவே பிடிக்கும். நம்ம சாப்பிடற ஸ்னாக்ஸ் எல்லாமே ஆரோக்கியம் அற்றதா தான் இருக்கு. காரணம் அது எல்லாமே மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தின எண்ணெயில செஞ்சது. அந்த மாதிரி நம்ம ஆரோக்கியம் இல்லாத தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலா வீட்டிலேயே ரொம்பவே ஆரோக்கியமான முறையில் ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடலாம். ஸ்னாக்ஸ் மட்டும் இல்லாம நம்ம சாப்பிடுற எல்லாமே ரொம்ப ஆரோக்கியமானதா செஞ்சு சாப்பிடணும்.

-விளம்பரம்-

இப்போ சிறுதானியங்கள் நம்ம சாப்பிடுறது உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும். ஆனா அந்த சிறுதானியங்கள்ல சாதம் பொங்கல் அப்படின்னு செஞ்சு கொடுத்தா குழந்தைங்க விரும்ப மாட்டாங்க. அதனால எப்பவுமே அவங்களுக்கு புடிச்ச மாதிரி ஒரு உணவுல நம்ம இந்த சிறுதானியங்களை கலந்து கொடுக்கணும். அந்த வகையில கம்பு வச்சு ஒரு அடை தான் நம்ம இப்போ செய்ய போறோம். கம்பு நம்ம உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.

நிறைய புரதச்சத்துக்களும் நார் சத்துக்களும் கம்பில இருக்கு அதனால உடல் எடையும் குறையும். இந்த மாதிரி நிறைய உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய விஷயங்கள் கம்புல இருக்கு. அதனால இப்ப நம்ம கம்ப வச்சு ஒரு இனிப்பு அடை செய்யப் போறோம்.

பொதுவா குழந்தைகளுக்கு இனிப்பு நான் ரொம்ப பிடிக்கும். எனவே இந்த சிறு தானியமான கம்புல இனிப்பு கலந்து ஒரு அடை மாதிரி செஞ்சு கொடுத்தா அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களுக்கும் இது ரொம்பவே நல்லது. சுலபமான முறையில் கம்பு இனிப்பு அடை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
No ratings yet

கம்பு இனிப்பு அடை | Kambu Sweet Adai Recipe In Tamil

சிறுதானியங்கள் நம்ம சாப்பிடுறது உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும். ஆனா அந்த சிறுதானியங்கள்லசாதம் பொங்கல் அப்படின்னு செஞ்சு கொடுத்தா குழந்தைங்க விரும்ப மாட்டாங்க. அதனால எப்பவுமேஅவங்களுக்கு புடிச்ச மாதிரி ஒரு உணவுல நம்ம இந்த சிறுதானியங்களை கலந்து கொடுக்கணும்.அந்த வகையில கம்பு வச்சு ஒரு அடை தான் நம்ம இப்போ செய்ய போறோம். கம்பு நம்ம உடம்புக்குகுளிர்ச்சியை கொடுக்கும். சுலபமான முறையில் கம்பு இனிப்பு அடை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Kambu Sweet Adai
Yield: 4
Calories: 155kcal

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கம்பு அரிசி
  • 1/2 கப் கடலைப்பருப்பு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 3/4 கப் வெல்லம்
  • 8 முந்திரி
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1 டீஸ்பூன் நெய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • வாழை இலை தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு குக்கரில் கடலைப்பருப்பை போட்டு இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். கடலை பருப்பு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் வெள்ளத்தை போட்டு நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். அதில் கடலைப்பருப்பை போட்டு நன்றாக கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
  • ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு தேங்காய் துருவல் போட்டு வறுத்து கடலை பருப்பு வெல்லக்கரைசலையும், ஏலக்காய் தூளையும் சேர்த்து கிளறி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • கம்பரிசியை நாலு மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். ஒரு அகலமான கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அரைத்த கம்பு மாவையும் தேவையான அளவு உப்பையும் சேர்த்துகைவிடாமல் கிளறி கெட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • மாவு நன்றாக ஆறிய உடன் சிறிய உருண்டைகளாக உருட்டி, வாழை இலையில் எண்ணெய் தடவி அடுப்பில் வாட்டிஎடுத்துக்கொண்டு அதில் அந்த மாவை வைத்து தட்டிக் கொள்ள வேண்டும்
  • பிறகு அதில் கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து மடித்து கொள்ளவும். ஒரு இட்லி பாத்திரத்தில் வாழை இலையில் செய்து வைத்த அந்த அடையை 15 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்
  • இப்பொழுது சத்தான ஆரோக்கியமான கம்பு இனிப்பு அடை தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 155kcal | Carbohydrates: 210g | Protein: 2.9g | Fiber: 5g