மாலை நேர ஸ்நாக்ஸாக காரைக்குடி கருப்பட்டி குழிப்பணியாரம் இப்படி செய்து பாருங்க!
பலகாரங்களுக்கு பெயர் பெற்றது செட்டிநாடு பகுதி. செட்டிநாட்டு பகுதிகளில் விதவிதமான பலவேறு பலகாரங்களை அங்குள்ள மக்கள் செய்து பண்டிகைகள் விழாக்கள் போன்ற நாட்களை சிறப்பித்து வருகிறார்கள். பாரம்பரியம் நிறைந்த பல்வேறு வகையான பலகாரங்கள் இந்த பகுதிகளில் செய்வது வழக்கம். அப்படி செட்டிநாட்ட
பலகாரங்களுக்கு பெயர் பெற்றது செட்டிநாடு பகுதி. செட்டிநாட்டு பகுதிகளில் விதவிதமான பலவேறு பலகாரங்களை அங்குள்ள மக்கள் செய்து பண்டிகைகள் விழாக்கள் போன்ற நாட்களை சிறப்பித்து வருகிறார்கள். பாரம்பரியம் நிறைந்த பல்வேறு வகையான பலகாரங்கள் இந்த பகுதிகளில் செய்வது வழக்கம். அப்படி செட்டிநாட்டு பகுதியில் சிறப்பு வாய்ந்த ஒரு பலகாரம் தான் கருப்பட்டி பணியாரம். கருப்பட்டியில் சுவைக்கு ஏற்ப மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. இதிலுள்ள இரும்புச்சத்து ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.
இது கல்லீரலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மிதமான இனிப்பில் ஆரோக்கியமானது கருப்பட்டி பணியாரம். அரிசி மாவை கருப்பட்டி பாகில் கலந்து செய்வது இந்த பணியாரம். ஆனால் இதை தயாரிக்க அதிக நேரம் தேவைப்படும். ஆனால் அந்தளவு நீங்கள் நேரம் செலவு செய்யதற்கு பலன் இருக்கும்.
பணியாரம் சாப்பிட ஆசைப்படுபவர்கள் இந்த செய்முறையைப் பின்பற்றி வீட்டிலேயே செட்டிநாடு குழிப்பணியாரம் செய்து அசத்துங்கள். ஸ்கூல், காலேஜ் விட்டுப் பிள்ளைகள் நேராக வீட்டுக்கு வரும்போது இந்த பணியாரத்தை சுடசுட தட்டில் போட்டுக் கொடுத்தால் அடுத்தமுறை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். உடலுக்கு நல்லதும் கூட. கருப்பட்டியை வைத்து செய்யக்கூடிய இந்த கருப்பட்டி பணியாரம் மிக சுவை நிறைந்ததாக இருக்கும். இந்த கருப்பட்டி பணியாரத்தை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.