கார்த்திகை மாத ராசிபலன் 2024!
மேஷம் மேஷ ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் நடக்கிறது. அதனால் இந்த மாதத்தில் நீங்கள் சவால்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது. எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. இந்த மாதத்தில் ஆடம்பரம் தேவையில்லை. பொறுமை ரொம்பவே அவசியம். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். வண்டி, வாகனம
மேஷம்
மேஷ ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் நடக்கிறது. அதனால் இந்த மாதத்தில் நீங்கள் சவால்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது. எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. இந்த மாதத்தில் ஆடம்பரம் தேவையில்லை. பொறுமை ரொம்பவே அவசியம். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். வண்டி, வாகனம், வீடு வாங்கும் யோகம் தேடி வரும். எதிரிகள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்க கூடாது.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு உற்சாகம் தரக்கூடிய காலமாக இருக்கும். தொழில், வியாபார ரீதியாக உங்களின் கடின உழைப்பு ஏற்ற அங்கீகாரமும், லாபமும் கிடைக்கும். வணிகத்தில் கூட்டாளிகள் மூலம் லாப கரமான வருவாய் இருக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தொழில் மற்றும் பிஸினஸ் செய்பவர்களுக்கு வெற்றி வீடு தேடி வரும். குடும்பத்தில் வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு உங்களின் தைரியத்தால் செயல்களில் சிறப்பான வெற்றியும், சாதனையும் படைக்கலாம். உங்கள் வியாபாரத்தில் புதிய சிந்தனையுடன் செயல்பட்டால் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் இட மாற்றம் கிடைக்க பெறலாம். எதிரிகளின் தொல்லை இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டு. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்
கடக ராசிக்கு கார்த்திகை மாதத்தில் புதிய வாய்ப்புகள் பல கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கும், வியாபாரம் தொடர்பாகவும் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். அதிக லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். குழந்தைகள் மூலமாக சந்தோஷம் உண்டாகும். அலுவலகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி வரும். மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது அவசியம்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு குடும்ப உறவுகளைப் பேணுவதில் கவனம் தேவை. உங்களின் குடும்பம், பிள்ளைகள் எதிர்காலம் தொடர்பான முதலீட்டில் ஈடுபடுவீர்கள். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய வேலை வாய்ப்புகள் வரும். சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பாராட்டு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கு சவால்கள் நிறைந்த மாதமாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகளும், பணியிடத்தில் வேலையில் திருப்தி இன்மை இருக்கும். தொழில் மாற்றம் செய்ய நினைப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு அனுகூலமான மாதம். வண்டி, வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாட்டு யோகமும் தேடி வரும்.
துலாம்
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு கார்த்திகை மாதத்தில் சேமிக்க நினைத்தாலும், செலவுக்கான ஆசை அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என்பதால் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நன்மை அளிக்கும். மன அழுத்தம் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் கடினமாக உழைக்க வேண்டி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த கார்த்திகை மாதத்தில் எதிலும் கவனமாகவும், செயலில் சுறுசுறுப்புடன் செயல்படுவது நல்லது. ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும், வேலையில் சாதக சூழலும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் லாபம் வரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்கு கார்த்திகை மாதத்தில் கலவையான அனுபவங்கள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு வழி பிறக்கும். தந்தையுடன் இணக்கமான சூழலும், தொண்டு செயல்களில் ஈடுபடவும் நினைப்பீர்கள். கடன் மேல் கடன் வாங்கிய தனுசு ராசியினருக்கு கடன் அடைபடும் சூழல் உருவாகும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மகரம்
மகர ராசிக்கு ஆச்சரியங்கள் தரக்கூடிய வகையில் பல நல்ல பலன்கள் தேடி வரும். எதிர்பார்த்த நிதி நன்மைகள் பெறலாம். பண வரவு இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரம்பரை சொத்து, நிதி நன்மைகள் பெறலாம். பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களுக்கு இந்த கார்த்திகை மாதத்தில் உற்சாகமானதாகவும், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். புதிய நட்புகள் பெறுவீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிரிகளின் தொல்லை விலகும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது.
மீனம்
மீன ராசிக்கு உங்கள் வேலையில் வளர்ச்சி ஏற்படும். ஆன்மிக பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. பொறுமை காப்பது நல்லது. குடும்பத்தில் மனைவியிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அடிக்கடி பிரச்சனை வரக் கூடும். தொழிலில் வெற்றியும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். யாருடைய ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்காது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இதனையும் படியுங்கள் : விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சூரியனால் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகும் சில ராசிகள்!