Advertisement
சைவம்

காரைக்குடி கத்தரிக்காய் மசாலா குழம்பு இப்படி செய்து பாருங்கள்!இதன் ருசியே தனி!!

Advertisement

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கத்தரிக்காய் மசாலா குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள்

இதையும் படியங்கள் : சுவையான செட்டிநாடு பாகற்காய் கார குழம்பு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கத்தரிக்காய் மசாலா குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கத்தரிக்காய் மசாலா குழம்பு | Kaththirikai Masala kulambu Recipe in Tamil

Print Recipe
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கத்தரிக்காய் மசாலா குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Kaththirikai Masala kulambu, கத்தரிக்காய் மசாலா குழம்பு
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 654

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 5 கத்தரிக்காய்
  • 1 tbsp கருப்பு கடலை
  • 1 வெங்காயம்
  • 1 சாம்பார் வெங்காயம்
  • 10 கறிவேப்பிலை
  • 2 தக்காளி
  • 1 tbsp காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp தனியா தூள்
  • 1 tbsp  கரம் மசாலாத்தூள்
  • புளி சிறியநெல்லிக்காய் அளவு
  • தேவையான அளவு உப்பு                             

தாளிக்க

  • 1 tsp கடுகு
  • 10 கறிவேப்பிலை
  • 1 சாம்பார் வெங்காயம்
  • 2 tbsp கடலை எண்ணெய்

Instructions

  • கத்தரிக்காய் மசாலா குழம்பு செய்ய முதலில் கருப்பு கொண்டை கடலையை ஊறவைத்து, முளைக்க வைத்து எடுத்து தயாராக வைக்கவும்.வெங்காயம்,தக்காளியை நறுக்கி,கறிவேப்பிலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • கடாயை ஸ்டவ்வில் வைத்து
    Advertisement
    எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து, கல் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அத்துடன் மிளகாய் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,தனியா தூள்,கரம் மசாலாத்தூள், புளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.அத்துடன் தேங்காய் துண்டுகள் சேர்த்து, சூடாரியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் கலந்து அரைக்கவும்.
  • குக்கரை ஸ்டவ்வில் வைத்து கடலையை சேர்த்து, அரைத்த மசாலா விழுதை சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து எடுக்கவும்.
  • கத்தரிக்காயை நீள வாக்கில் நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்து,நல்லெண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து வதக்கவும்.பின்பு அரைத்த மசாலா விழுதை சேர்க்கவும்.பின்னர் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  • கத்தரிக்காய் மசாலாவுடன், வேக வைத்து வைத்துள்ள கடலை மசாலாவை சேர்த்து,கொஞ்சமாக தண்ணீர் கலந்து வேக வைக்கவும்.
  • ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து, எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கி, தாளிப்பு கொடுத்து இறக்கினால் குழம்பு தயார்.
  • தயாரான குழம்பை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.இப்போது மிகவும் சுவையான, சத்தான முளைக்கட்டிய கருப்பு கொண்டை கடலை, கத்தரிக்காய் மசாலா குழம்பு சுவைக்கத்தயார்.
  • முளைக்கட்டிய கருப்பு கடலை, கத்தரிக்காய் மசாலா குழம்பு சாதம்,தோசை, இட்லி, சப்பாத்தி போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சுவைக்கலாம்.

Nutrition

Serving: 400gm | Calories: 654kcal | Carbohydrates: 23g | Sodium: 564mg | Potassium: 354mg | Sugar: 4.9g | Calcium: 54mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

3 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

4 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

8 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

17 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

18 மணி நேரங்கள் ago