பாகற்காய் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது அதனால் பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவதும் உணவோடு சேர்த்துக் கொள்ளவேண்டும். பாகற்காய் சிலருக்கு பிடிக்காது அணல் இந்த முறை படி பாகற்காய் கார குழம்பு செய்து கொடுத்து பாருங்கள் உப்பு, புளிப்பு, காரம், கசப்புத்தன்மை கலந்த குழம்பு மிகவும் சுவையாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : செட்டிநாடு பிரண்டை கார குழம்பு செய்வது எப்படி ?
உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த செட்டிநாடு பாகற்காய் குழம்பு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும் இன்னும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அது மட்டுமில்லாமல் அடிக்கடி இதை உங்களை செய்து தர சொல்லி தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு ஒரு தாறுமாறான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த செட்டிநாடு பாகற்காய் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணாலாம் வாருங்கள்.
செட்டிநாடு பாகற்காய் கார குழம்பு | Pakarkai Kulambu Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 300 கிராம் பாகற்காய்
- ½ டீஸ்பூன் வெந்தயம் வறுத்து பொடி செய்தது
- 200 கிராம் சின்னவெங்காயம் நறுக்கிது
- 50 மி.லி நல்லெண்ணெய்
- 2 தக்காளி
- புளி எலுமிச்சைப்பழ அளவு
- உப்பு தேவையான அளவு
- 5 பல் பூண்டு நறுக்கியது
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1½ டீஸ்பூன் தனியாதூள்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 100 கிராம் தேங்காய் துருவல்
செய்முறை
- முதலில் முற்றாத பாகற்காயின் விதைகளை நீக்கி பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவேண்டும்.
- பிறகு சீரகம், தேங்காய் துருவல், தக்காளியை மிக்சியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பாகற்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். நன்கு வதங்கியதும் வெங்காயத்தை சேர்த்து, நன்குவதக்கவும், வெங்காயம் வதங்கியதும், அதில் வெந்தயப் பொடி, பூண்டு, தனியாதூள், மிளகாய்தூள், மஞ்சள் தூள், சேர்த்து கிளறவும்.
- பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து புளித் தண்ணீர் சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- குழம்பு கெட்டியானது இறக்கினால் சுவையான பாகற்காய் கார குழம்பு தயார்.