செட்டிநாடு பிரண்டை கார குழம்பு செய்வது எப்படி ?

- Advertisement -

இந்த பிரண்டைக் காரக்குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வீட்டில் வேலைக்கு செல்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும், தினமும் எதை செய்து குடுக்கலாம் என்று சிந்தித்து சிந்தித்து சலித்து விட்டதா அப்பொழுது ஒரு முறை இந்த செட்டிநாடு பிரண்டைக் காரக்குழம்பு செய்து கொடுத்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் பதியதாகவும் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த பிரண்டை உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கும். மூளை நரம்புகளை பலப்படுத்தும்.எலும்புகளுக்கு சக்தி தரும். வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

- Advertisement -

இதையும் படியுங்கள் : காரசாரமான சின்ன வெங்காய புளி குழம்பு செய்வது எப்படி ?

இந்த பிரண்டைக் காரக்குழம்பு எப்படி செய்வதென்று செய்முறைகள் கீழே கொடுத்துளோம் அதை படித்து பார்த்து நீங்களும் வீட்டில் சமைத்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.

-விளம்பரம்-

குறிப்பு: பிரண்டையை அறியும் போது கைகள் அரிக்கும், அதற்கு எல் எண்ணெய் அல்லது நல்எண்ணெய் கைகளில் தேய்த்து அறியவும்.

Print
5 from 1 vote

செட்டிநாடு பிரண்டை காரக்குழம்பு | Chettinad Pirandai Karakulambu Recipe in Tamil

இந்த பிரண்டைக் காரக்குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வீட்டில் வேலைக்கு செல்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும், தினமும் இன்று எதை செய்து குடுக்கலாம் என்று சிந்தித்து சிந்தித்து சலித்து விட்டதா அப்பொழுது ஒரு முறை இந்த செட்டிநாடு பிரண்டைக் காரக்குழம்பு செய்து கொடுத்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் மேலும் இந்த செட்டிநாடு பிரண்டை கார குழம்பு புதியதாகவும் இருக்கும். அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பிரண்டை உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கும் மற்றும் மூளை நரம்புகளை பலப்படுத்தும்.எலும்புகளுக்கு சக்தி தரும். வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
Prep Time10 mins
Active Time20 mins
Total Time30 mins
Course: Kulambu
Cuisine: Indian, TAMIL
Keyword: pirandai kulambu, பிரண்டை காரக்குழம்பு
Yield: 4 people
Calories: 41kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 1 கப் இளம் பிரண்டைத் துண்டுகள் ஓரத்தில் உள்ள நாரை நீக்கவும்.
 • 10 சின்னவெங்காயம்
 • 10 பூண்டு
 • 1 தக்காளி பொடியாக நறுக்கியது.
 • கருவேப்பிலை சிறிதளவு
 • ¼ டேபிள் ஸ்பூன் பெருங்காய தூள்
 • ¼ டேபிள் ஸ்பூன் கடுகு
 • ¼ டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
 • ¼ டேபிள் ஸ்பூன் சீரகம்
 • ¼ டேபிள் ஸ்பூன் வெந்தயம்
 • 2 காய்ந்த மிளகாய்
 • 3 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
 • ¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்
 • புளி நெல்லிக்காய் அளவு
 • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
 • உப்பு தேவையான அளவு

செய்முறை

 • முதலில் புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
 • அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், போட்டு தாளிக்கவும்.
 • பின்பு அதில் வெங்காயம், கருவேப்பிலை, பூண்டு, பிரண்டை துண்டுகள், சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
 • நன்றாக வதங்கிய பிறகு அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
 • பிரண்டை நன்றாக வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும். இப்பொழுது சுவையான பிரண்டை காரக்குழம்பு தயார்.
 • குறிப்பு: பிரண்டை முற்றியதாக இருந்தால் குழம்பு சாப்பிடும் பொது அரிக்கும். அதனால் இளசாக பார்த்து வாங்கிக்கொள்ளவும்.

Nutrition

Serving: 4g | Sodium: 150mg | Calcium: 2.77mg | Vitamin C: 1.5mg | Vitamin A: 2.25IU | Potassium: 0.18mg | Calories: 41kcal | Fat: 3.34g | Iron: 3.67mg

LEAVE A REPLY

Recipe Rating
Please enter your comment!
Please enter your name here