Advertisement
அசைவம்

ருசியான கிழங்கான் மீன் குழம்பு செய்வது எப்படி!

Advertisement

ருசியான கிழங்கான் மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே தனி பிரியம் உண்டு. நிறைய வகை மீன்குழம்புகளை நாம் வீட்டில் செய்து ருசித்திருப்போம், ஆனால் கிழங்கான் மீன் குழம்பு செய்து ருசித்திருக்கிகளா. மிகவும் சுவையாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் பெயருக்கு ஏற்றமாரி மீனும் கிழங்கு போலத்தான் இருக்கும், குறைந்த அளவே முள்ளு தான் இருக்கும். குழந்தைகளுக்கும், மீன் சாப்பிட தெரியாதவர்களுக்கும் இந்த மீனில் குழம்போ, அல்லது வருவாளோ செய்து தரலாம் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.

கிழங்கான் மீன் குழம்பு | Kelangan Fish Curry Recipe In Tamil

Print Recipe
ருசியான கிழங்கான் மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே தனி பிரியம் உண்டு. நிறைய வகை மீன்குழம்புகளை நாம் வீட்டில் செய்து ருசித்திருப்போம், ஆனால் கிழங்கான் மீன் குழம்பு செய்து ருசித்திருக்கிகளா. மிகவும் சுவையாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் பெயருக்கு ஏற்றமாரி மீனும் கிழங்கு போலத்தான் இருக்கும், குறைந்த அளவே முள்ளு தான் இருக்கும். குழந்தைகளுக்கும், மீன் சாப்பிட தெரியாதவர்களுக்கும் இந்த மீனில் குழம்போ, அல்லது வருவாளோ செய்து தரலாம் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword kilanga fish curry, கிழங்கான் மீன் குழம்பு
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • ½ கிலோ கிழங்கான் மீன்
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 டீஸ்பூன் மிளகு
  • 2 டீஸ்பூன் சீரகம்
  • 1 துண்டு சுக்கு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • புளி எலுமிச்சை அளவு
  • 1 பூண்டு
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் வெந்தயம்
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

செய்முறை:

  • முதலில் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். புளியை நன்றாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து சுக்கு, மிளகு, சீரகம், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு அரைத்ததை புளிக்கரைசலில் கரைத்து தேவையான அளவு உப்பு, போட்டு கலக்க வேண்டும்.
  • பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வதங்கியதும் கரைத்து வைத்த மசாலா புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் மீன் துண்டுகளை போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு கொத்தமல்லி இழைகளை தூவி இறக்கவும்.
  • இப்பொழுது சுவையான கிழங்கான் மீன் குழம்பு தயார்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

1 மணி நேரம் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

6 மணி நேரங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

15 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

16 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

18 மணி நேரங்கள் ago