Advertisement
சைவம்

எவ்வளவு செய்தாலும் காலியாகும் ருசியான கேரளா கத்தரிக்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க!

Advertisement

கத்திரிக்காயை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். ஏனென்றால் கத்தரிக்காய் மருத்துவ குணம் நிறைந்தது. சுவாசக் கோளாறு நுரையீரல் கோளாறு முக்கியமாக மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக இதை சாப்பிட வேண்டும். கத்திரிக்காயை பொரியல் குழம்பு அவியல் என ஒரே மாதிரியாக செய்து சாப்பிடுவதற்கு பதில், இந்த பதிவில் உள்ள கத்தரிக்காய் தொக்கை ஒரு தரம் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

இதையும் படியுங்கள : காரசாரமான சுவையில் கத்திரிக்காய் சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

இந்த கத்தரிக்காய் தொக்கு சாப்பாடுக்கு மட்டும் இல்லாம தோசை, இட்லி, சப்பாத்த இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த கத்திரிக்காய் தொக்கின் சுவை ஒரு தனி ரகம், அது மட்டுமல்லாமல் உடலுக்கும் ஆரோக்கியமானது. வாங்க நண்பர்களே இதை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்ப்போம்.

கேளா கத்திரிக்காய் தொக்கு | Kerala Brinjal Thokku Recipe in Tamil

Print Recipe
கத்திரிக்காயை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். ஏனென்றால் கத்தரிக்காய் மருத்துவ குணம் நிறைந்தது. சுவாசக் கோளாறு நுரையீரல் கோளாறு முக்கியமாக மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக இதை சாப்பிட வேண்டும். கத்திரிக்காயை பொரியல் குழம்பு அவியல் என ஒரே மாதிரியாக செய்து சாப்பிடுவதற்கு பதில், இந்த பதிவில் உள்ள கத்தரிக்காய் தொக்கை ஒரு தரம் செய்து சாப்பிட்டு பாருங்கள். இந்த கத்தரிக்காய் தொக்கு சாப்பாடுக்கு மட்டும் இல்லாம தோசை, இட்லி, சப்பாத்த இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த கத்திரிக்காய் தொக்கின் சுவை ஒரு தனி ரகம், அது
Advertisement
மட்டுமல்லாமல் உடலுக்கும் ஆரோக்கியமானது. வாங்க நண்பர்களே இதை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்ப்போம்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Eggplant, கத்திரிக்காய்
Prep Time 25 minutes
Cook Time 20 minutes
Total Time 45 minutes
Servings 5 People
Calories 112

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி ஜார்

Ingredients

  • 3 tsp எண்ணெய்
  • 6 கத்திரிக்காய்
  • 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 10 பல் பூண்டு
  • 1/2 tsp சீரகம்
  • 1/2 tsp சோம்பு
  • 2 தக்காளி அரைத்து எடுத்தது
  • 1 tsp மிளகாய்த்தூள்
  • 1 tsp குழம்பு தூள்
  • 1 tsp மல்லி தூள்
  • 1/4 tsp பெருங்காயம்
  • 1/2 tsp மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எலுமிச்சை அளவு புளி கரைத்து எடுத்தது
  • 1 டம்ளர் தண்ணீர்
  • மல்லி இலை தேவையான அளவு

Instructions

  • முதலில் கத்திரிக்காயை பொடியாக நறுக்கி எடுத்துக்கொண்டு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்த கத்திரிக்காயை பொரித்து தனியாக மாற்றி எடுத்துக் கொள்ளவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும், வெங்காயம் நன்கு வதங்கி நிறம் மாறிய பின் பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் சீரகம் சோம்பு சேர்த்து வதக்கவும்.
  • அடுத்ததாக அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, மிளகாய் தூள், குழம்பு தூள், மல்லித்தூள், பெருங்காயம், உப்பு இவற்றை சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  • பின் கரைத்து வைத்த புளித்தண்ணீர் சேர்த்து கடாயை மூடி வைத்து நன்கு கொதிக்க விடவும். மூன்று நிமிடம் கழித்து கடாயை திறந்து பார்த்தால், என்னை தனியாக பிரிந்து வந்திருக்கும்.
  • அதோடு எடுத்து வைத்த தண்ணீரை சேர்த்து, நன்கு கலந்து விட்டு கொதித்த உடன், பொறித்து வைத்த கத்திரிக்காயை சேர்த்து, ஒரு பத்து நிமிடம் குறைவான தீயில் அடி பிடிக்காமல் கலந்துவிட்டு அதனுடன் மல்லி இலை சேர்த்து கடாயை இறக்கி வைத்தால் சுவையான கத்தரிக்காய் தொக்கு தயார்.

Nutrition

Serving: 420G | Calories: 112kcal | Protein: 9g | Cholesterol: 1.2mg | Fiber: 2g | Sugar: 0.5g
Advertisement
Prem Kumar

Recent Posts

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

7 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

7 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

8 மணி நேரங்கள் ago

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

10 மணி நேரங்கள் ago

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

13 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…

14 மணி நேரங்கள் ago