ருசி நிறைந்த சுட்ட கத்திரிக்காய் சட்னி ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இட்லி தோசைக்கு தினம் தினம் தொட்டுக்கொள்ள என்ன சைடு டிஷ் செய்வது என்ற குழப்பம் இல்லத்தரசிகளுக்கு இருக்கும் .சுடச்சுட இட்லி, தோசை, பணியாரம், ஆப்பம் இவைகளுக்கு இந்த சட்னி கூடுதல் சுவையை சேர்க்கும். வழக்கம் போல 4 இட்லி, சாப்பிடுபவர்கள் கூடுதலாக இரண்டு இட்லியை சாப்பிடும் அளவுக்கு பசியை தூண்டக்கூடிய ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள்
இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ஏற்ற பிரண்டை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கத்திரிக்காய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கத்திரிக்காய் சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கத்திரிக்காய் சட்னி| Kaththarikai Chuney Receipe in Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 3 கத்தரிக்காய்
- 1 வெங்காயம்
- 1 tbsp வெள்ளை எள்
- 1 புளி lemon size
- ¼ tsp பெருங்காயம்
- கொத்தமல்லி, கறிவேப்பிலை
- 1 tbsp உளுத்தம் பருப்பு
- 1 tsp கடுகு
- 1 tbsp வெந்தயம்
- 5 மிளகாய் வற்றல்
- 3 tbsp நல்எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- கத்தரிக்காய் சட்னி செய்ய முதலில் கத்தரிக்காயை நன்கு கழுவி துடைத்து அதன்மேல் இலேசாக எண்ணெயைத் தடவவும். இதனை அப்படியே தோலோடு அடுப்பில் வைத்து சுட வேண்டும்.
- மேல் தோல் நன்கு நிறம் மாறும்வரை வைத்து சுட்டு, காய் நன்றாக ஆறிய பிறகு தோலை உரித்தெடுக்கவும்.
- வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து உளுத்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம் இவைகளை சிவக்க வறுத்து எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும்.
- நறுக்கிய வெங்காயத்தைத் தனியாகச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்.
- இதனுடன் எள், சுட்ட கத்தரிக்காய், வெங்காயம், மிளகாய், புளி, வெந்தயம் இவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.
- நன்றாக அரைத்த பின் உளுத்தம் பருப்பைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து உப்பைச் சேர்க்கவும்.
- கடுகு, பெருங்காயப் பொடியை சேர்த்து எண்ணெயில் தாளித்து கொட்டவும். சுவையான சுட்ட கத்தரிக்காய் சட்னி தயார்.