உங்கள் கைவிட்டு சென்று பணம், தங்க நகை திரும்பி உங்கள் கைக்கே வர இதை மட்டும் செய்து விடுங்கள் போதும்!
ஒருவரிடம் பழகிய பழக்கத்திற்காக இரக்கப்பட்டு பணம் கொடுத்து உதவி இருப்போம். ஆனால் அந்த பணத்தை திருப்பி தராமல் அவர்கள் ஏமாற்றி இருப்பார்கள். சிலர் நகைகள், சொத்துக்களை கொடுத்து ஏமாந்திருக்கலாம். திரும்ப கொடுத்து விடுவார்கள் என்ற எண்ணத்தில், தங்களின் கஷ்டத்திலும் ஏற்பாடு செய்து கொ
ஒருவரிடம் பழகிய பழக்கத்திற்காக இரக்கப்பட்டு பணம் கொடுத்து உதவி இருப்போம். ஆனால் அந்த பணத்தை திருப்பி தராமல் அவர்கள் ஏமாற்றி இருப்பார்கள். சிலர் நகைகள், சொத்துக்களை கொடுத்து ஏமாந்திருக்கலாம். திரும்ப கொடுத்து விடுவார்கள் என்ற எண்ணத்தில், தங்களின் கஷ்டத்திலும் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணம், சரியான நேரத்தில் மீண்டும் அந்த கடன் பெற்றவர்களால் திரும்ப கொடுக்கப்படாமல் ஏமாற்றப்படுவதால், அடுத்த முறை உதவும் எண்ணம் அற்றுப் போகிறது. இன்னும் சிலர் யாரையாவது நம்பி வாழ்க்கையை இழந்து, மூலையில் முடங்கும் நிலை ஏற்பட்டிருக்கும். இன்னும் சிலருக்கு திருப்பி தருகிறேன் என சொல்லி பணத்தை கடனான வாங்கியவர்கள் திருப்பி தராமல், பிறகு தருகிறேன் என சொல்லி இழுத்தடிக்கும் நிலை இருக்கும்.
ஒருவரை நம்பி கொடுத்த பணம் வருடக் கணக்கில் திரும்பி வராமல் இருக்கும். பணத்தை திருப்பி தர சொல்லி கேட்டு நீங்கள் சலித்து போய் இருப்பீர்கள். இப்படி பணம் திரும்பி வராமல் வருடக்கணக்கில் இழுப்படிப்பதால் மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கும். என்ன செய்தும் நம்முடைய பணம், நகை, சொத்து திரும்ப கிடைக்கவில்லையே என வேதனைபடுபவர்கள் வீட்டிலேயே சில எளிய பரிகாரங்களை செய்வதால் நல்ல தீர்வு கிடைக்கும். இப்படி யாராவது நம்பி பணம் அல்லது நகைகளை கொடுத்து ஏமாந்தவர்கள் சில பரிகாரங்களை செய்து வந்தால், கடன் வாங்கியவர்கள் மனம் மாறி வாங்கிய பணம் அல்லது நகைகளை வீடு தேடி வந்து கொடுத்துவிடுவார்கள். அந்த பரிகாரத்தை எப்படி செய்வதென்று இந்த ஆன்மீகப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பணம் திரும்ப கிடைக்க எளிய பரிகாரம்
நம்முடைய வீட்டில் நாம் தினசரியும் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கேற்றினால் மனம் அமைதியடையும். வீடே மங்களகரமாக இருக்கும். விளக்கேற்றுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். இழந்த சொத்துக்களும், செல்வமும் கூட மீட்கப்படலாம் என்கின்றனர் நம்முடைய முன்னோர்கள். இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு தேவையான ஒரே பொருள் பச்சை கற்பூரம். பச்சை கற்பூரம் அழகு சார்ந்த விஷயங்களிலும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த பச்சைக் கற்பூரத்தை நம் முன்னோர்கள் முக்கிய பொருளாகவும் ஆன்மீக ரீதியிலும் கண்டார்கள்.
பரிகாரம் செய்யும் முறை
இந்த பரிகாரம் செய்ய சிறிய அகல் விளக்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை கற்பூரத்தை வைத்து எறித்து விடுங்கள். இதை எறிந்து முடிந்ததும் இதில் இருக்கும் மையை, அதாவது விளக்கின் உட்பகுதியில் படிந்து இருக்கும் கருப்பு மையை நடுவிரலால் தொட்டு ஒரு வெள்ளை நிற பேப்பரில் யாரிடமிருந்து பணம் வர வேண்டுமோ அவரின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள். இப்படி நீங்கள் எழுதும் போது பணம் தர வேண்டிய நபரின் முகத்தையும், பணம் விரைவில் வர வேண்டும் என நினைத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு பத்து என்ற அளவில் மல்லி விதைகளை எடுத்து உங்கள் வலது கையில் வைத்து இறுக்கமாக மூடி உங்களுக்கு தரவேண்டிய பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என்று வேண்டி நாம் எடுத்து வைத்திருக்கும் அகல் விளக்கில் போட்டு விடுங்கள். பின் நாம் எழுதி வைத்த வெள்ளை தாளையும் இந்த அகல் விளக்கில் வைத்து அதனுடன் பச்சை கற்பூரத்தையும் வைத்து எரித்து விடுங்கள். இது முழுவதுமாக எரிந்து முடித்த பின் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள் அல்லது ஓடும் நீரில் போட்டு விடுங்கள்.
இதனையும் படியுங்கள் : உங்களுக்கு எவ்வளவு கடன் இருந்தாலும் தீர்க்கும் அதை சங்கடஹர சதுர்த்தி விநாயகர் வழிபாடு!
முன்னோர்கள் அருளிய இந்த தாந்திரீக முறையை நாம் நம்பிக்கையுடன் செய்து வந்தால் நாம் கொடுத்த கடன் தொகை மீண்டும் கிடைக்கும். நம்மை ஏமாற்றி அபகரித்த பணம், சொத்துக்கள், அல்லது ஏமாற்ற முயல்பவர்களிடமிருந்து நம் பணம் உள்ளிட்டவை மீண்டும் பெற்றிடலாம்.