Home ஆன்மிகம் உங்களுக்கு எவ்வளவு கடன் இருந்தாலும் தீர்க்கும் அதை சங்கடஹர சதுர்த்தி விநாயகர் வழிபாடு!

உங்களுக்கு எவ்வளவு கடன் இருந்தாலும் தீர்க்கும் அதை சங்கடஹர சதுர்த்தி விநாயகர் வழிபாடு!

எந்த காரியத்தை துவங்க வேண்டும் என்றாலும் முதலில் கணபதியை வணங்கிய பிறகே செய்ய வேண்டும் என்பார். பொதுவாகவே, விநாயகப் பெருமானை எல்லா நாளும் வழிபடலாம். தவிர, எந்த தெய்வங்களை வழிபட்டாலும் முதலில் முதல்வன் முழுமுதற்கடவுள் விநாயகரை வழிபட்ட பிறகுதான் அடுத்தடுத்து தெய்வங்களை வழிபடுவோம். பக்தர்கள் தொடங்கும் எந்த ஒரு செயலையும் வெற்றிகொள்ள செய்பவரே முழுமுதற் கடவுளான விநாயகர். அவரை வணங்குபவரை சுற்றியுள்ள எதிர்மறையானவற்றை விலக்கி நன்மைகளைத் தரும் நேர்மறை ஆற்றலை பெறுக செய்வார்.

-விளம்பரம்-

விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால் கஷ்டம் என்று பொருள் ஹர என்றால் அழிப்பது என்று பொருள். விரதம் இருந்து சங்கடங்களை அழிப்பதற்கான நாளையே சங்கடரஹர சதுர்த்தி என்கிறோம். மாதந்தோறும் சதுர்த்தி வரும். ஆனால் இந்த நவம்பர் மாதத்தில் வருகிற சங்கடஹர சதுர்த்தி இன்னும் சிறப்பானது. சங்கடஹர சதுர்த்தி வழிபாடு அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியது என அனைவருக்கும் தெரியும். அதிலும் மாதத்தின் முதல் நாளில் புதன்கிழமையில் வருகிற இந்த சதுர்த்தி தினத்தில் நாம் என்ன வழிபாடு செய்தாலும் அது உடனே பளிக்கும். இந்த நன்நாளில் விநாயகரை எப்படி வழிபடலாம் என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

வழிபாடு செய்யும் முறை

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி ஆகும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் அதிகாலையில் எழுந்து, விநாயகருக்கு அருகம்புல், எருக்கம் பூ ஆகியவை சாற்றி, அவரின் படத்திற்கு முன் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய்யும், நல்லெண்ணையும் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும். அவருக்கு பிடித்த உணவு வகைகளில் ஒன்றான கொலுக்கட்டை, மோதகம், லட்டு, சுண்டல், அப்பம், சர்க்கரை பொங்கல், வடை இதில் ஏதேனும் ஒன்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

அதன் பிறகு விநாயகரின் பாதத்தில் ஒரு சிவப்பு நிற துணியை வைத்து, அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். அடுத்ததாக அவரின் முன் ஒரு வெற்றிலையை வைத்து 27 முறை குங்குமத்தால் “ஓம் கணபதியே போற்றி” என அர்ச்சனை செய்யுங்கள். நீங்கள் அர்ச்சனை செய்த குங்குமத்தை தினமும் உங்கள் நெற்றியில் வைத்து வாருங்கள் உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் இந்த ஒரு ரூபாய் நாணயத்தை, சிகப்பு நிற துணியுடன் விநாயகர் கோவிலுக்கு சென்று உண்டியலில் போட்டு விடுங்கள்.

விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம், தும்பைப்பூ, செம்பருத்தி மலர், சங்குப்பூ, புஷ்பம், எருக்கம்பூ, மா இலை, அருகம்புல், வில்வ இலை, இவற்றில் உங்களால் எது வாங்க முடியுமோ அதனை வாங்கி விநாயகருக்கு அர்ச்சனை செய்ய கொடுங்கள்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : பணம் கையில் தாராளமாக புரலும் கையில் வெறும் வால் மிளகு இருந்தால் மட்டும் பொதும்!

இந்த வழிபாடு செய்தால் உங்களுக்கு இருக்கும் பண கஷ்டம், குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் என அனைத்து கஷ்டங்களும் படிப்படியாக குறைவதை நீங்கள் காணலாம். பிணிகள், காரியத் தடைகள், கடன் தொல்லை முதலான சகல பிரச்னைகளையும் தீர்க்கும்.