Advertisement
சைவம்

கொண்டக்கடலை பிரியாணி இப்படி செய்து பாருங்க!

Advertisement

குழந்தைகளுக்கு, மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு மதியம் சாப்பாடு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த கொண்டக்கடலை வைத்து ருசியான பிரியாணி செய்து கொடுத்து பாருங்க அவர்களும் விரும்ம்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் பிரியாணி போலவே இதிலும் அதே டேஸ்ட் இருக்கும்.

இதனுடன் தயிர் பச்சடி, முட்டை வறுத்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Advertisement

இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

கொண்டக்கடலை பிரியாணி|Kondakadalai Biriyani Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கு, மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு மதியம் சாப்பாடு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த கொண்டக்கடலை வைத்து ருசியான பிரியாணி செய்து கொடுத்து பாருங்க அவர்களும் விரும்ம்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் பிரியாணி போலவே இதிலும் அதே டேஸ்ட் இருக்கும்.
இதனுடன் தயிர் பச்சடி, முட்டை வறுத்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword kondakadalai biriyani, கொண்டக்கடலை பிரியாணி
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Total Time 22 minutes
Servings 4 people

Equipment

  • 1 குக்கர்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கப் பச்சரிசி
  • 1 கப் கொண்டக்கடலை வேக வைத்தது
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 பட்டை
  • 1 ஏலக்காய்
  • 2 கிராம்பு
  • 1 கப் பெரிய வெங்காயம்
  • ½ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பச்சை மிளகாய்
  • 2 தக்காளி
  • புதினா கொஞ்சம்
  • கொத்தமல்லி இலை கொஞ்சம்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லித் தூள்
  • 1 டீஸ்பூன் கார மசாலா
  • ½ ஸ்பூன் எலுமிச்சை சாறு

Instructions

செய்முறை:

  • முதலில் அரிசியை ஊறவைத்துக்கொள்ளவும். பிறகு கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.
  • ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பட்டை, பிரிஞ்சி, ஏலக்காய், கிராம்பு சேர்த்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது, பச்சைமிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் தக்காளி, சேர்த்து கொழைய வதக்கவும். வதங்கியதும், புதினா, கொத்தமல்லி இழைகளை சேர்த்து, வத்தகுவதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து மசாலாவில் பச்சை வாசனை போனதும் கரம் மசாலா சேர்த்து, ஒரு கப் அரிசிக்கு 2 அல்லது 2¼ கப் தண்ணீர் ஊற்றி கலந்து வேக வைத்த கொண்டக்கடலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • கொதித்ததும் அரிசியை சேர்த்து கலந்து எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கவும்.
  • இப்பொழுது சுவையான கொடாக்கடலை பிரியாணி தயார்.
Advertisement
swetha

Recent Posts

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

56 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

4 மணி நேரங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

13 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

14 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

16 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

21 மணி நேரங்கள் ago