- Advertisement -
குழந்தைகளுக்கு, மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு மதியம் சாப்பாடு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த கொண்டக்கடலை வைத்து ருசியான பிரியாணி செய்து கொடுத்து பாருங்க அவர்களும் விரும்ம்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் பிரியாணி போலவே இதிலும் அதே டேஸ்ட் இருக்கும்.
இதனுடன் தயிர் பச்சடி, முட்டை வறுத்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
- Advertisement -
இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.
கொண்டக்கடலை பிரியாணி|Kondakadalai Biriyani Recipe In Tamil
குழந்தைகளுக்கு, மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு மதியம் சாப்பாடு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த கொண்டக்கடலை வைத்து ருசியான பிரியாணி செய்து கொடுத்து பாருங்க அவர்களும் விரும்ம்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் பிரியாணி போலவே இதிலும் அதே டேஸ்ட் இருக்கும். இதனுடன் தயிர் பச்சடி, முட்டை வறுத்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.
Yield: 4 people
Equipment
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- 1 கப் பச்சரிசி
- 1 கப் கொண்டக்கடலை வேக வைத்தது
- எண்ணெய் தேவையான அளவு
- 1 பிரிஞ்சி இலை
- 1 பட்டை
- 1 ஏலக்காய்
- 2 கிராம்பு
- 1 கப் பெரிய வெங்காயம்
- ½ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 பச்சை மிளகாய்
- 2 தக்காளி
- புதினா கொஞ்சம்
- கொத்தமல்லி இலை கொஞ்சம்
- உப்பு தேவைக்கேற்ப
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் மல்லித் தூள்
- 1 டீஸ்பூன் கார மசாலா
- ½ ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை
செய்முறை:
- முதலில் அரிசியை ஊறவைத்துக்கொள்ளவும். பிறகு கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.
- ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பட்டை, பிரிஞ்சி, ஏலக்காய், கிராம்பு சேர்த்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது, பச்சைமிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் தக்காளி, சேர்த்து கொழைய வதக்கவும். வதங்கியதும், புதினா, கொத்தமல்லி இழைகளை சேர்த்து, வத்தகுவதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து மசாலாவில் பச்சை வாசனை போனதும் கரம் மசாலா சேர்த்து, ஒரு கப் அரிசிக்கு 2 அல்லது 2¼ கப் தண்ணீர் ஊற்றி கலந்து வேக வைத்த கொண்டக்கடலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- கொதித்ததும் அரிசியை சேர்த்து கலந்து எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கவும்.
- இப்பொழுது சுவையான கொடாக்கடலை பிரியாணி தயார்.