கொங்கு ஸ்டைல் பச்சை பயிறு கடையல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் உணவு இருக்கும். மதுரைக்கு கறி தோசை, திருநெல்வேலிக்கு அல்வா, விருதுநகருக்கு பரோட்டா, ஆம்பூர் பிரியாணி அப்படின்னு ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில கொங்கு நாட்டு பக்கம் அரிசி பருப்பு சாதம் பச்சை பயிறு கடையல் இது எல்ல
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் உணவு இருக்கும். மதுரைக்கு கறி தோசை, திருநெல்வேலிக்கு அல்வா, விருதுநகருக்கு பரோட்டா, ஆம்பூர் பிரியாணி அப்படின்னு ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில கொங்கு நாட்டு பக்கம் அரிசி பருப்பு சாதம் பச்சை பயிறு கடையல் இது எல்லாமே ரொம்ப ரொம்ப ஃபேமஸ். அப்படி இருக்கும் போது இப்ப நம்ம கொங்கு ஸ்டைல் சத்தான பச்சை பயிறு கடையல் எப்படி செய்றதுன்னு தான் பாக்க போறோம். பச்சை பயறுல நிறைய சத்துக்கள் இருக்கு. பச்சை பயிறு ரெசிபி கண்டிப்பா சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே சாப்பிட வேண்டியது.
பொதுவா பயிறு வகைகள் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது அதுலயும் இந்த பச்சை பயறுல நிறைய சத்துக்கள் இருக்கு. பச்சை பயிறு வச்சு நிறைய ரெசிபி செய்யலாம் பச்சை பயிறு தோசை பச்சை பயிறு புளிக்குழம்பு பச்சை பயிறு சுண்டல் அப்படின்னு நிறைய செஞ்சாலும் இந்த கடையல் மாதிரி எதுவுமே வராது. இதுக்கு சைடிஷா அப்பளம் மட்டும் பொரிச்சு சாப்பிட்டாலே ரொம்ப சூப்பரா இருக்கும். சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க.
தட்டுல சுட சுட சாதம் போட்டு அது மேல பச்சை பயறு கடையல் வச்சு நெய் ஊத்தி சாப்பிட்டால் அவ்வளவு சூப்பரா இருக்கும் ஒரு தடவை சாப்பிட்டு பாருங்க கண்டிப்பாக உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இந்த ரெசிபியை செய்யலாம் ஆனா கொங்கு நாட்டு ஸ்பெஷல் ரெசிபியை அந்த பக்கம் எப்படி பண்ணுவாங்களோ அதே மாதிரி செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும் இப்ப வாங்க இந்த சுவையான ஆரோக்கியமான பச்சை பயறு கடையல் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : குழந்தைகளோட ஆரோக்கியத்துக்கு இனிமேல் பச்சை பயறு தோசை செஞ்சு கொடுங்க!!