- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் உணவு இருக்கும். மதுரைக்கு கறி தோசை, திருநெல்வேலிக்கு அல்வா, விருதுநகருக்கு பரோட்டா, ஆம்பூர் பிரியாணி அப்படின்னு ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில கொங்கு நாட்டு பக்கம் அரிசி பருப்பு சாதம் பச்சை பயிறு கடையல் இது எல்லாமே ரொம்ப ரொம்ப ஃபேமஸ். அப்படி இருக்கும் போது இப்ப நம்ம கொங்கு ஸ்டைல் சத்தான பச்சை பயிறு கடையல் எப்படி செய்றதுன்னு தான் பாக்க போறோம். பச்சை பயறுல நிறைய சத்துக்கள் இருக்கு. பச்சை பயிறு ரெசிபி கண்டிப்பா சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே சாப்பிட வேண்டியது.
பொதுவா பயிறு வகைகள் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது அதுலயும் இந்த பச்சை பயறுல நிறைய சத்துக்கள் இருக்கு. பச்சை பயிறு வச்சு நிறைய ரெசிபி செய்யலாம் பச்சை பயிறு தோசை பச்சை பயிறு புளிக்குழம்பு பச்சை பயிறு சுண்டல் அப்படின்னு நிறைய செஞ்சாலும் இந்த கடையல் மாதிரி எதுவுமே வராது. இதுக்கு சைடிஷா அப்பளம் மட்டும் பொரிச்சு சாப்பிட்டாலே ரொம்ப சூப்பரா இருக்கும். சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க.
தட்டுல சுட சுட சாதம் போட்டு அது மேல பச்சை பயறு கடையல் வச்சு நெய் ஊத்தி சாப்பிட்டால் அவ்வளவு சூப்பரா இருக்கும் ஒரு தடவை சாப்பிட்டு பாருங்க கண்டிப்பாக உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இந்த ரெசிபியை செய்யலாம் ஆனா கொங்கு நாட்டு ஸ்பெஷல் ரெசிபியை அந்த பக்கம் எப்படி பண்ணுவாங்களோ அதே மாதிரி செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும் இப்ப வாங்க இந்த சுவையான ஆரோக்கியமான பச்சை பயறு கடையல் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : குழந்தைகளோட ஆரோக்கியத்துக்கு இனிமேல் பச்சை பயறு தோசை செஞ்சு கொடுங்க!!
Ingredients
Method
ஒரு குக்கரில் 5 மணி நேரம் ஊறவைத்த பச்சை பயிறு தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து நான்கு விசில் விட்டு எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை நறுக்கிய சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
சீரகம் மற்றும் மல்லி விதைகளை நன்றாக இடித்து வைத்துக் கொள்ளவும். பூண்டையும் இடித்துக் கொள்ளவும்.
இரண்டையும் கடாயில் சேர்த்து வெங்காயத்துடன் நன்றாக வதக்கவும்.
பிறகு எடுத்து வைத்துள்ள பச்சைப்பயிறு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி இலைகள் தூவி நன்றாக கடைந்து இறக்கினால் சுவையான பச்சைப்பயிறு கடையல் தயார்.






