Advertisement
சைவம்

சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட ருசியான தக்காளி குழம்பு ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும்.இந்த சுவையான கொங்கு நாட்டு தக்காளி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம்

இதையும் படியுங்கள் : காரசாரமான கிராமத்து சுவையில் விரால் மீன் குழம்பு வீட்டுல இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கொங்கு நாட்டு தக்காளி குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கொங்கு நாட்டு தக்காளி குழம்பு | Kongu Nattu Thakkali Kulambu Receipe in Tamil

Print Recipe
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும்.இந்த சுவையான கொங்கு நாட்டு தக்காளி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Takkali Kulambu, தக்காளி குழம்பு
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 528

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 1 பட்டை
  • 3 கிராம்பு
  • 15 சின்ன வெங்காயம்
  • 7 பூண்டு
  • 5 தக்காளி
  • ½ tbsp பொரிகடலை
  • ¼ tsp சோம்பு
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 2 tsp சாம்பார் தூள்
  • ½ tsp மிளகாய் தூள்
  • ¼ tsp கடுகு
  • ½ tsp உளுத்தம் பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • தேவையான அளவு தண்ணீர்                     
  • 3 tbsp எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு                             
    Advertisement

Instructions

  • கொங்கு நாட்டு தக்காளி குழம்பு செய்ய முதலில் கடாய் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு சேர்த்து தாளித்து பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
  • அதன்பின் பூண்டு, சின்ன வெங்காயம் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பொரிகடலையை சேர்க்க வேண்டும்.
  • பொரிகடலையை சேர்த்து பின் தக்காளியை சேர்த்துக்கொண்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், சாம்பார் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து திரும்பவும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின் கலவை ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்க வேண்டும்.
  • பொடியாக நறுக்கி வைத்திருக்கின்ற பெரிய வெங்காயத்தை அதில் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின் கருவேப்பிலையை அதில் சேர்க்க வேண்டும்.
  • வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்திருக்கின்ற தக்காளி விழுதை அதில் சேர்த்து உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.இப்பொழுது சுவையான கொங்கு நாட்டு தக்காளி குழம்பு தயார்.

Nutrition

Serving: 300Gm | Calories: 528kcal | Carbohydrates: 213g | Cholesterol: 12mg | Sodium: 258mg | Potassium: 256mg | Sugar: 3.4g | Calcium: 12mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

4 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

14 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

14 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

15 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

16 மணி நேரங்கள் ago