- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும்.இந்த சுவையான கொங்கு நாட்டு தக்காளி குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம்
இதையும் படியுங்கள் : காரசாரமான கிராமத்து சுவையில் விரால் மீன் குழம்பு வீட்டுல இப்படி செஞ்சி பாருங்க!
சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கொங்கு நாட்டு தக்காளி குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
கொங்கு நாட்டு தக்காளி குழம்பு செய்ய முதலில் கடாய் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு சேர்த்து தாளித்து பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
அதன்பின் பூண்டு, சின்ன வெங்காயம் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பொரிகடலையை சேர்க்க வேண்டும்.
பொரிகடலையை சேர்த்து பின் தக்காளியை சேர்த்துக்கொண்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், சாம்பார் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து திரும்பவும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் கலவை ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்க வேண்டும்.
பொடியாக நறுக்கி வைத்திருக்கின்ற பெரிய வெங்காயத்தை அதில் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின் கருவேப்பிலையை அதில் சேர்க்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்திருக்கின்ற தக்காளி விழுதை அதில் சேர்த்து உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.இப்பொழுது சுவையான கொங்கு நாட்டு தக்காளி குழம்பு தயார்.






