திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு மதிய உணவிற்கு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அம்புட்டு ருசியாக இருக்கும்!!

மதிய வேளையில் சிம்பிளாக அதேசமயம் சத்தான சமையல் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் காய்கறிகள் வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று தக்காளி சாதம், புளி சாதம் போல் இல்லாமல் த

By Prem Kumar · 16/2/2026

மதிய வேளையில் சிம்பிளாக அதேசமயம் சத்தான சமையல் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் காய்கறிகள் வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று தக்காளி சாதம், புளி சாதம் போல் இல்லாமல் திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு செய்யுங்கள்.

தென்னிந்திய உணவுப் பாரம்பரியத்தில் நெல்லை மாவட்ட உணவிற்கு தனித்துவமான சுவை, ஆரோக்கியம், பாரம்பரியம் உள்ளது. அதில் நெல்லை மாவட்டத்தில் கூட்டாஞ்சோறு பரிபூரண உணவாக பரிமாறப்படுகின்றது. நெல்லை கூட்டாஞ்சோறு என்பது நிறைய வகையான காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா சேர்ந்து தயாரிக்கப்படும் சுவை மற்றும் மணம் மிக்க உணவு. கத்தரிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய், மாங்காய் மற்றும் வாழைக்காய் போன்ற உள்ளூர் காய்கறிகளே இதற்குச் சிறந்த சுவையைத் தரும்.

கூட்டாஞ்சோற்றின் உயிர்நாடியே இறுதியில் சேர்க்கப்படும் ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை தான். இதில் சேர்க்கப்படும் வெங்காயம், பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்த விழுது இதன் மணத்தைக் கூட்டும். இது சீக்கிரம் கெட்டுப் போகாது என்பதால், குற்றாலம் அல்லது திருச்செந்தூர் போன்ற இடங்களுக்குச் சுற்றுலா செல்லும்போது நெல்லை மக்கள் இதை விரும்பி எடுத்துச் செல்வர்.

குறிப்பாக இதில் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் போது, அந்த ரெசிபி ருசியாக இருப்பதோடு, சத்தானதாகவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும். காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை ஒரே ஒருமுறை செய்து கொடுங்கள், நிச்சயம் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இப்போது சுவையான திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : நெல்லை ஸ்பெஷல் கருப்பட்டி உளுந்தங்களி இப்படி செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full