- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
மதிய வேளையில் சிம்பிளாக அதேசமயம் சத்தான சமையல் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் காய்கறிகள் வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று தக்காளி சாதம், புளி சாதம் போல் இல்லாமல் திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு செய்யுங்கள்.
தென்னிந்திய உணவுப் பாரம்பரியத்தில் நெல்லை மாவட்ட உணவிற்கு தனித்துவமான சுவை, ஆரோக்கியம், பாரம்பரியம் உள்ளது. அதில் நெல்லை மாவட்டத்தில் கூட்டாஞ்சோறு பரிபூரண உணவாக பரிமாறப்படுகின்றது. நெல்லை கூட்டாஞ்சோறு என்பது நிறைய வகையான காய்கறிகள், பருப்பு, அரிசி மற்றும் மசாலா சேர்ந்து தயாரிக்கப்படும் சுவை மற்றும் மணம் மிக்க உணவு. கத்தரிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய், மாங்காய் மற்றும் வாழைக்காய் போன்ற உள்ளூர் காய்கறிகளே இதற்குச் சிறந்த சுவையைத் தரும்.
கூட்டாஞ்சோற்றின் உயிர்நாடியே இறுதியில் சேர்க்கப்படும் ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை தான். இதில் சேர்க்கப்படும் வெங்காயம், பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்த விழுது இதன் மணத்தைக் கூட்டும். இது சீக்கிரம் கெட்டுப் போகாது என்பதால், குற்றாலம் அல்லது திருச்செந்தூர் போன்ற இடங்களுக்குச் சுற்றுலா செல்லும்போது நெல்லை மக்கள் இதை விரும்பி எடுத்துச் செல்வர்.
குறிப்பாக இதில் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் போது, அந்த ரெசிபி ருசியாக இருப்பதோடு, சத்தானதாகவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும். காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை ஒரே ஒருமுறை செய்து கொடுங்கள், நிச்சயம் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இப்போது சுவையான திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : நெல்லை ஸ்பெஷல் கருப்பட்டி உளுந்தங்களி இப்படி செஞ்சி பாருங்க!
Ingredients
Method
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் குக்கரில் அரிசி மற்றும் துவரம் பருப்பை சேர்த்து, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் கொடுத்துள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
பின் முருங்கை கீரை, மிளகாய் தூள், புளி தண்ணீர், நாம் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.
பின் வேகவைத்துள்ள அரிசி பருப்பை சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி, நெய் சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கூட்டாஞ்சோறு தயார்.






