அதிர்ஷ்டத்தை தரக்கூடிய குபேர மூலை!
நாம் எவ்வளவுதான் ரத்தம் சிந்தி உழைத்தாலும் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என்றால் சாதிக்கவே முடியாது அதிர்ஷ்டம் என்பதை கடவுள் எனும் ஆசிர்வாதம் என்றும் கூறலாம். தெய்வத்தின் அருள் இல்லாதவர்களால் வாழ்க்கையில் எவ்வளவு நினைத்தாலும் எவ்வளவு உழைத்தாலும் முன்னேறவே முடியாது. தெய்வத்தின்
நாம் எவ்வளவுதான் ரத்தம் சிந்தி உழைத்தாலும் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என்றால் சாதிக்கவே முடியாது அதிர்ஷ்டம் என்பதை கடவுள் எனும் ஆசிர்வாதம் என்றும் கூறலாம். தெய்வத்தின் அருள் இல்லாதவர்களால் வாழ்க்கையில் எவ்வளவு நினைத்தாலும் எவ்வளவு உழைத்தாலும் முன்னேறவே முடியாது. தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் அந்த வகையில் வீட்டில் உள்ள குபேர மூலையால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
குபேர திசை
வீட்டில் பல திசைகள் இருந்தாலும் கூட குபேர திசையை குறிப்பது தென்மேற்கு திசை இந்த திசை ஒருவருக்கு நன்றாக அமைந்து விட்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்றால் தென்மேற்கு திசையான குபேர மூலையில் ஒரு சில பொருட்களை வைக்க வேண்டும். என்னென்ன பொருட்களை வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிர்ஷ்டத்தை தரும் குபேர மூலை
வீட்டில் தென்மேற்கு திசையில் இருக்கக்கூடிய குபேர மூலையில் குபேரன் சிலை அல்லது குபேரர் படத்தை வைக்க வேண்டும் மேலும் அதே இடத்தில் மூன்று பானைகளையும் வைத்து வணங்க வேண்டும்.
மூன்று மண்பானைகள்
குபேர மூலையில் மூன்று மண்பானைகளை வைப்பதன் மூலம் நல்லது நடக்கும் மூன்று மண்பானைகளையும் நன்று கழுவி சுத்தம் செய்து மஞ்சள் அல்லது சந்தனத்தை பானை முழுவதும் தடவி காய வைக்க வேண்டும். ஒரு பானையில் கல்லுப்பை சேர்க்க வேண்டும் மற்றொரு பானையில் துவரம் பருப்பை சேர்க்க வேண்டும் மூன்றாவது பானையில் ஐந்து ரூபாய் நாணயங்களை போட்டு நிரப்ப வேண்டும்.
மஞ்சள் குங்குமம்
மூன்று பானைகளிலும் இந்த பொருட்களை வைத்த பிறகு அதன் மேல் மஞ்சள் குங்குமம் வைத்து பூ ஒன்றையும் வைக்க வேண்டும். பிறகு பானைகளை ஒன்றின் மேல் ஒன்று வைத்து கீழே விழுகாதவாறு குபேரன் படத்திற்கு அருகில் வைக்க வேண்டும்.
குபேரர் பூஜை
வியாழக்கிழமை தோறும் குபேரருக்கு குபேர மூலையில் நெய்விளக்கு ஏற்றி வைத்து தொடர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். உங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து வகையான பொருளாதாரப் பிரச்சினைகளையும் குபேரர் தீர்த்து வைப்பார் உங்களுக்கு தேவைக்கு ஏற்ற வருமானத்தை நீங்கள் சம்பாதிப்பீர்கள். முழு மனதோடு குறைவில்லாத செல்வத்தை பெறுவதற்கு இதை நிச்சயமாக உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : குபேர யோகம் பெறுவதற்கு சிவபெருமானை வழிபட வேண்டிய முறை!