குடும்பத்தில் உள்ள சண்டைகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ பரிகாரம்

வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? பிரச்சனை இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். உதாரணத்திற்கு குடும்பத்தில் அண்ணன் - தம்பி பிரச்சனை, அக்கா தங்கை பிரச்சனை, சொத்து பிரச்சனை, பண பிரச்சனை இவை அ

By Prem Kumar · 30/9/2025

வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? பிரச்சனை இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். உதாரணத்திற்கு குடும்பத்தில் அண்ணன் – தம்பி பிரச்சனை, அக்கா தங்கை பிரச்சனை, சொத்து பிரச்சனை, பண பிரச்சனை இவை அனைத்தையும் தீர்த்து வைக்க முடியும். ஆனால் எப்போதுமே வீட்டில் பிரச்சனை வந்துக்கொண்டே இருந்தால் என்ன செய்வது? மன நிம்மதி இருக்காது. உடல் ஆரோக்கியம் சீர்கெடும், எந்த வேலையிலும் நாட்டம் இருக்காது. நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் குடும்பத்தில் சந்தோஷம் இருக்க வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்க வேண்டும் என்றால் குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும். சண்டை சச்சரவுகள் இல்லாத வாழ்கை வாழவும், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் உதிக்கவும் மிக சிறப்பான பரிகாரங்கள் உள்ளது அதனைப் பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க பரிகாரம்

பொதுவாக குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ தான் ஆசைப்படுபவர்கள். அதற்கு உங்கள் குடும்பத்துடன் பிள்ளையார்பட்டிக்கு சென்று அங்குள்ள கற்பக விநாயகருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து மனதார வழிபடுங்கள். பின் அங்கு தரும் விபூதி பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு வந்து சிறுதுணியில் கட்டி வீட்டு வாசல்படி முன் வைத்துவிடுங்கள். மேலும் குடும்பத் தலைவன், தலைவி என அவரவர் பிறந்த கிழமைகளில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று அருகம்புல் மாலை சாற்றி, சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்யுங்கள். இந்த பரிகாரத்தை செய்தாலே போதும் உங்கள் குடும்பங்களில் அவ்வப்போது நிகழும் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கி சந்தோஷமாக ஒற்றுமையுடன் நல்லதொரு குடும்பம் அமையும்.

குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர

பொதுவாக அனைவருக்கும் குடும்பத்தில் மன அமைதி குறைவு, தெளிவின்மை, எப்போதும் சிந்தனைகள், பண விவகாரங்களில் தடை போன்றவை இருந்து கொண்டே இருக்கும். அதற்கு நம் வீட்டு வாசலில் சதுர வடிவில் மஞ்சளால் கோலமிட்டு, அதன் மீது வேப்பிலையை பரப்பி அதில் 2 அகல் விளக்குகளில் மஞ்சள் திரியிட்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி விளக்கேற்றி வந்தால் எதிரிகள் நம்மை விட்டு விலகுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். இந்த பரிகாரத்தை வார வாரம் செய்து வரலாம் அல்லது தொடர்ந்து 11 வாரங்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சண்டை நீங்க பரிகாரம்

தெய்வ வழிபாட்டில் தேங்காய் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. இந்த தேங்காயை வைத்து நாம் அனைத்து நல்ல காரியங்களையும் செய்வது போலவே நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களையும் நீக்க முடியும். அந்த வகையில் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய சண்டைகள் நீங்குவதற்கு ஒரு தேங்காயை வாங்கி சுத்தம் செய்து அது முழுக்க மஞ்சளை தடவி குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பின் இந்த தேங்காயை அப்படியே உங்களுடைய வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் எப்பொழுதும் போல் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்து விட்டு இந்த தேங்காயை இரண்டாக உடைத்து விட்டு உங்களுடைய நிலை வாசலின் இரண்டு புறங்களிலும் வைக்க வேண்டும். பின் அன்றைய‌ நாள் மாலையில் விளக்கேற்றி விட்டு இந்த தேங்காயை எடுத்து உங்கள் தலையை மூன்று முறை சுத்தி கால் படாத இடத்தில் போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து முகம் கைகள் கால்களை கழுவி விட்டு உள்ளே செல்லுங்கள். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இதனால் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழலாம்.

இதனையும் படியுங்கள் : உங்கள் குடும்பம் மனநிம்மதியுடன், மகிழ்சியாக இருக்க! ஒரு கைப்பிடி கல் உப்பு இருந்தால் போதும்!

Recipes AMP · Quick view
View full