உங்கள் குடும்பம் மனநிம்மதியுடன், மகிழ்சியாக இருக்க! ஒரு கைப்பிடி கல் உப்பு இருந்தால் போதும்!

- Advertisement -

பணம் இல்லாவிடிலும் நாம் நாமாகவே இருப்பதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அது நாம் குடும்பமாக மட்டுமே இருக்கும். நாமும் நாம் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நினைக்க கூடிய ஒரே விஷயம் என்னவென்றால் நம்முடைய குடும்பத்தில் எப்போதும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் இருக்க வேண்டும். குடும்பத்தில் எந்தவிதமான சண்டை சச்சரவுகளும் இருக்கக் கூடாது மேலும் குடும்பத்துக்குள் பிரிவினைகள் உண்டாகக் கூடாது குடும்பத்தில் வறுமை என்பது இருக்கக்கூடாது என இது போன்ற விஷயங்களுக்காகத்தான் நாம் குடும்பத்திற்காக கோவில்கள் கோவிலாக சென்று பிரார்த்தனை மேற்கொள்வோம். ஆனால் இந்த விஷயங்கள் அனைத்தையும் நாம் ஒரு பரிகாரம் செய்வதன் மூலம் ஒன்று சேர அனுபவிக்க முடியும் அதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

கல் உப்பு

பொதுவாக வீட்டில் குடும்பம் நிறைவாகவும், மனம் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்றால் லட்சுமி கடாட்சம் தேவை அப்படி லட்சுமி கடாட்சம் இருக்கும் வேண்டுமென்ற இடத்தில் கட்டாயமாக கல் உப்பு இருக்க வேண்டும். ஏனென்றால் கல் உப்பு மகாலட்சுமியின் அம்சமாகும். ஆனால் தற்போதைய நாட்களில் பலர் வீடுகளிலும் கல் உப்பு என்றது மறைந்து தூள் உப்பை பயன்படுத்துகிறார்கள். இதனால் தான் இப்போதெல்லாம் பல வீடுகளில் குடும்பம் மனம் நிறைவுடன் மகிழ்ச்சியுடனும் இருப்பதில்லை இருந்தாலும் இன்னும் சிலர் வீடுகளில் கல் உப்பை வாங்கி பயன்படுத்துகிறார்கள் அவர்கள் வீட்டில் எல்லாம் குடும்பம் கலகலவென மன நிறைவுடன், எப்பொழுதும் நிம்மதியாக இருக்கும்.

- Advertisement -

கல் உப்பு பரிகாரம்

மேலும் உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லவா எந்த வீட்டில் கல் உப்பு அல்ல குறையாமல் நிறைவாக இருக்கின்றதோ அந்த வீடுகளில் பணம் ஐஸ்வர்யம் போன்றவைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் இது தான் உண்மை. அதனால் நாம் குடும்பமும் மனநிறையுடன் சந்தோஷமாக இருக்க கல்லுப்பை பயன்படுத்தி தான் பரிகாரம் செய்ய போகிறோம். இந்த பரிகாரம் செய்வதற்கு கண்ணாடி பவுல் அல்லது மண்ணால் செய்யப்பட்ட ஒரு பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பவுல் நிறைய உப்பை நிரப்பி அதன் மேல் வட்ட வடிவமாக ஐந்து மிளகு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த பவுலை உங்களின் வீட்டில் வரவேற்பு அறையில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள் நாம் இப்படி நிரப்பி வைத்திருக்கும் கண்ணாடி பவுல் உடைய கூடாது மற்றும் உப்பு கீழே கொட்ட கூடாது. அதனால் குழந்தைகள் இருந்தால் வீட்டில் ஜாக்கிரதையாக ஒரு மூலையில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம். அதனால் வீட்டின் மூலையில் இருக்கும் மேஜைகள்: அலமாரிகள், பீரோ போன்ற இடத்தில் வைக்கலாம்.

பத்து நாட்கள்

நாம் எப்படி வரவேற்பு அறையில் வைத்து உப்பு 10 நாட்கள் வரை அங்கேயே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்களே உங்கள் வீட்டில் நிகழும் மாற்றங்களை உணரத் தொடங்குவீர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் கஷ்டத்தோடு, மனசஞ்லத்தோடு இருப்பவர்களும், அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களும் கூட சந்தோஷமாக ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். உங்கள் வீட்டில் அதையும் மீறி இருக்கும் கடன் சுமை, வறுமை போன்றவை நீங்கி. உங்கள் வீட்டின் மீது கண் திருஷ்டி விழாத வண்ணம் இந்த உப்பு பார்த்துக் கொள்ளும். பின்பு பத்து நாட்கள் முடிந்தவுடன் இந்த உப்பை உங்கள் வீட்டின் அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து விடுங்கள். பின்பு அதே போல் உப்பு நிரப்பி மிளகை வட்ட வடிவமாக வைத்து அதே இடத்தில் வைத்து விடுங்கள்.

இரவில் மன நிம்மதி இல்லாதவர்கள்

நாம் வீட்டில் இருக்கும் சில நபர்களுக்கு வித்தியாசமான முறையில் இந்த பிரச்சனை இருக்கும் அவர்கள் பகல் நேரங்களில் அவ்வளவு சந்தோசமாக இருப்பார்கள் ஆனால் இரவு நேரம் வந்ததும் நிம்மதியான தூக்கம் இருக்காது கடந்த காலத்தை நினைத்து வருந்தி கொண்டே இருப்பார்கள். எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் இப்படியாக இரவு முழுவதும் ஒரு சிந்தனையில் இருப்பார்கள் இவர்களும் மனமகிழ்ச்சியுடன் இருப்பதற்கு ஒரு பரிகாரம் உள்ளது. அதாவது ஒரு மஞ்சள் துணியில் எடுத்துக் கொண்டு அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை வைத்துக் கொள்ளுங்கள் பின்பு இதனுடன் 10 மிளகு சேர்த்து ஒரு முடிச்சாக கட்டி அவர்களின் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வையுங்கள்.

-விளம்பரம்-

உப்பை தொடக்ககூடாது

இப்படி மூன்று நாட்கள் அந்த முடிச்சை அவர்களின் தலையணையின் அடியில் வைத்து தூங்க சொல்லுங்கள். பின் மூன்று நாட்கள் முடிந்ததும் அந்த முடிச்சோடு உப்பை எடுத்து கொண்டு போய் உங்கள் வீட்டின் அருகில் உள்ள ஓடும் நீர் நிலைகளில் போட்டு விடுங்கள். இப்படி செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் முடிச்சுகள் வைத்திருக்கும் உப்பை எந்த காரணம் கொண்டும் தொடக்கூடாது ஏனென்றால் உங்களை சுற்றி உள்ள எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் அந்த உப்பு ஈர்த்து விடும் அதன் பின்பு ஒரு பெரிய டாப்பில் தண்ணீர் எடுத்து உப்பில் உங்கள் கைப்படாமல் அந்த டப்பில் உப்பை கரைத்து விடுங்கள். பின் அந்த தண்ணீரை உங்கள் வீட்டில் அருகில் மனிதன் காலடிப்படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். அவ்வளவுதான் நம்பிக்கையோடு இதை செய்து வாருங்கள் உங்கள் குடும்பத்தில் கலகலவென சந்தோசமும், மகிழ்ச்சியும் நிரம்பி வழியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here