குலதெய்வம் வீட்டிற்கு வருவதற்கும் பிற்காலத்தில் நடக்க போவதை முன்பே அறிந்து கொள்வதற்கும் செய்ய வேண்டியவை!

பொதுவாக ஒரு குலத்தில் முன்பு வாழ்ந்து ஏதேனும் ஒரு தியாகம் செய்து மறைந்து குளத்தில் பிற்காலத்தில் வருகின்றவர்களை காத்து அருள் புரிபவர்களே குலதெய்வங்கள். என்னதான் பல்வேறு தெய்வங்களை வணங்கினாலும் நம்முடைய குல தெய்வத்தை வணங்கினால் மட்டுமே நம் வீட்டிற்கு தேவையான அனைத்து சந்தோஷங்களையும

By Prem Kumar · 17/3/2024

பொதுவாக ஒரு குலத்தில் முன்பு வாழ்ந்து ஏதேனும் ஒரு தியாகம் செய்து மறைந்து குளத்தில் பிற்காலத்தில் வருகின்றவர்களை காத்து அருள் புரிபவர்களே குலதெய்வங்கள். என்னதான் பல்வேறு தெய்வங்களை வணங்கினாலும் நம்முடைய குல தெய்வத்தை வணங்கினால் மட்டுமே நம் வீட்டிற்கு தேவையான அனைத்து சந்தோஷங்களையும் நிம்மதியையும் பெற முடியும். குலதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது.

குறிப்பாக மாசி மற்றும் பங்குனி மாதங்களில் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் சிறந்தது. அனைவரும் தங்களுடைய குலதெய்வத்தை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஒரு சிலர் மாத மாதம் குலதெய்வ வழிபாடு செய்வார்கள். இன்னும் ஒரு சிலர் வாரவாரம் அனைத்து தெய்வங்களையும் வழங்கும்போது முதலில் குலதெய்வத்தை வழிபட்டு விட்டே பிறகு மற்ற தெய்வங்களை வழிபடுவார்கள். இப்பொழுது இருக்கும் இந்த நவீன காலத்தில் பலருக்கு அவர்களுடைய குலதெய்வம் யார் குலதெய்வ கோவில் எங்கு உள்ளது என்பதை பற்றிய உண்மை தெரியாது ஆனால் அந்த குலதெய்வம் தெரியாததால் அவர்களுக்கு வருகின்ற பிரச்சனைகளிலிருந்து அவர்களை காத்துக் கொள்வதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குலதெய்வத்தை வழிபடுவதன் முக்கியத்துவம்

ஒவ்வொருவருடைய குடும்பத்திற்கும் குலதெய்வம் மாறுபடும். நாம் குலதெய்வத்தை வழிபட்டு வந்தால் மட்டுமே மற்ற தெய்வங்களுடைய அருளையும் நம்மை பெற முடியும். வீட்டில் மகிழ்ச்சி பொருளாதார வளர்ச்சி கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை என அனைத்துமே குலதெய்வ வழிபாட்டால் மட்டுமே நம்மால் பெற முடியும். பொதுவாக நம் வீட்டில் ஏதேனும் ஒரு பிரச்சனை வந்தால் ஜோதிடர்களே முதலில் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் என்று தான் கூறுவார்கள். எனவே அடிக்கடி நாம் குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம். அடிக்கடி முடியவில்லை என்றாலும் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று குல தெய்வத்தை வழிபட வேண்டும்.

ஒருவேளை உங்களால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்கள் உங்களால் அடிக்கடி வர முடியவில்லை என்றாலும் குலதெய்வ கோவிலுக்கு செல்வதில் தடை ஏற்பட்டாலும் குலதெய்வத்தையே நீங்கள் வசிக்கின்ற உங்கள் வீட்டிற்கு வர வைக்க எளிமையான பரிகாரம் ஒன்று உண்டு. அதனைப் பற்றி பார்க்கலாம்.

பொதுவாக ஒரு சிலருக்கு குலதெய்வம் ஆண் தெய்வமாக இருக்கும் ஒரு சிலருக்கு பெண் தெய்வமாக இருக்கும். ஆகவே ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான பரிகாரம் உண்டு. ஆண் தெய்வத்திற்கான பரிகாரத்தை பற்றியும் பெண் தெய்வத்திற்கான பரிகாரத்தை பற்றியும் பார்க்கலாம்.

குலதெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் நாம் செய்ய வேண்டிய பரிகாரம்

முதலில் ஒரு சதுரமான சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளவும் பிறகு உங்கள் வீட்டில் ஈசானி மூலையில் இருந்து ஒரு பிடி மண் எடுத்து அந்த துணியில் வைத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு பெரிய கட்டி கற்பூரம், 10 ஏலக்காய்,10 கிராம்பு , 2 பட்டை, எலுமிச்சம் பழம் சிறிய பச்சை கற்பூரம் மற்றும் உங்களிடம் மட்டை தேங்காயிருந்தால் அதனையும் சேர்த்து வைத்து அனைத்தையும் ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ள வேண்டும். மட்டை தேங்காய் இல்லை என்றால் மற்ற பொருட்களை மட்டும் வைத்து கட்டிக் கொள்ளலாம். இப்பொழுது இதனை வீட்டில் நிலை வாசல் முன்னே ஆணி எடுத்து அங்கே தொங்க விடவும்.

குலதெய்வம் பெண் தெய்வமாக இருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்

உங்கள் குலதெய்வம் பெண் தெய்வமாக இருந்தால் ஒரு சதுரமான மஞ்சள் நிற துணியை எடுத்து அதில் ஈசானி மூலையில் இருந்து ஒரு பிடி மண் எடுத்து அந்த துணியில் வைத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு பெரிய கட்டி கற்பூரம், 10 ஏலக்காய்,10 கிராம்பு , 2 பட்டை, எலுமிச்சம் பழம் சிறிய பச்சை கற்பூரம் மற்றும் கருகமணியையும் சேர்த்து வீட்டின் நிலை வாசல் முன்னே முடிச்சாக கட்டி தொங்க விடவும்.

பொதுவாக குலதெய்வம் வீட்டின் நிலை வாசலில் தான் குடியிருக்கும் என்று சொல்வார்கள். எனவே உங்கள் குலதெய்வம் எது என்பதை தெரிந்து கொண்டு முடிச்சாக கட்டி நிலை வாசலில் தொங்கவிட்டு தினமும் தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். இந்த பூஜையை நீங்கள் செய்ய தொடங்கியதில் இருந்தே உங்கள் வீட்டிற்கு நல்ல காலம் பிறந்து மகிழ்ச்சியும் பொருளாதார வளர்ச்சி நிம்மதியும் கிடைக்கும். மேலும் நடக்க போகின்ற விஷயங்களை முன்கூட்டியே உங்கள் கனவில் மனித உருவத்தில் வந்த அந்த குலதெய்வமே எச்சரிக்கும். இந்த பூஜையை நீங்கள் செய்ய தொடங்கினால் உங்களுடைய குலதெய்வம் உங்கள் வீட்டில் வந்து வாசம் செய்யும். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் குலதெய்வம் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க, இல்லாத குல தெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்கவும் எளிமையான பரிகாரம்!

Recipes AMP · Quick view
View full