குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமல் தடை வருகிறதா? இப்போது இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்!
பொதுவாக ஒரு குலத்தில் முன்பு வாழ்ந்து ஏதேனும் ஒரு தியாகம் செய்து மறைந்து குளத்தில் பிற்காலத்தில் வருகின்றவர்களை காத்து அருள் புரிபவர்களே குலதெய்வங்கள். என்னதான் பல்வேறு தெய்வங்களை வணங்கினாலும் நம்முடைய குல தெய்வத்தை வணங்கினால் மட்டுமே நம் வீட்டிற்கு தேவையான அனைத்து சந்தோஷங்களையும
பொதுவாக ஒரு குலத்தில் முன்பு வாழ்ந்து ஏதேனும் ஒரு தியாகம் செய்து மறைந்து குளத்தில் பிற்காலத்தில் வருகின்றவர்களை காத்து அருள் புரிபவர்களே குலதெய்வங்கள். என்னதான் பல்வேறு தெய்வங்களை வணங்கினாலும் நம்முடைய குல தெய்வத்தை வணங்கினால் மட்டுமே நம் வீட்டிற்கு தேவையான அனைத்து சந்தோஷங்களையும் நிம்மதியையும் பெற முடியும். குலதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது. குறிப்பாக மாசி மற்றும் பங்குனி மாதங்களில் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் சிறந்தது. அனைவரும் தங்களுடைய குலதெய்வத்தை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஒரு சிலர் மாத மாதம் குலதெய்வ வழிபாடு செய்வார்கள்.
இன்னும் ஒரு சிலர் வார வாரம் அனைத்து தெய்வங்களையும் வழங்கும்போது முதலில் குலதெய்வத்தை வழிபட்டு விட்டே பிறகு மற்ற தெய்வங்களை வழிபடுவார்கள். ஆனால் குலதெய்வத்தின் அருள் அத்தனை எளிதில் நமக்கு கிடைத்து விடாது. குலதெய்வத்தின் அருள் கிடைப்பதில் நமக்கு பல தடங்கள் வரும், ஏன் குலதெய்வ கோவிலுக்குச் செல்லவே பல தடங்கள் வரும். அப்படி குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமல் தடை வருபவர்களுக்கு தான் இந்த ஆன்மீகப் பதிவு.
குலதெய்வத்தை வழிபடுவதன் முக்கியத்துவம்
ஒவ்வொருவருடைய குடும்பத்திற்கும் குலதெய்வம் மாறுபடும். நாம் குலதெய்வத்தை வழிபட்டு வந்தால் மட்டுமே மற்ற தெய்வங்களுடைய அருளையும் நம்மை பெற முடியும். வீட்டில் மகிழ்ச்சி பொருளாதார வளர்ச்சி கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை என அனைத்துமே குலதெய்வ வழிபாட்டால் மட்டுமே நம்மால் பெற முடியும். பொதுவாக நம் வீட்டில் ஏதேனும் ஒரு பிரச்சனை வந்தால் ஜோதிடர்களே முதலில் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் என்று தான் கூறுவார்கள். எனவே அடிக்கடி நாம் குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம். அடிக்கடி முடியவில்லை என்றாலும் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று குல தெய்வத்தை வழிபட வேண்டும்.
யார் இந்த குலதெய்வங்கள்?
குல தெய்வம் பலவகைப் படலாம். தொன்று தொட்டு பரம்பரை பரம்பரையாக வழிபடும் பெரும் தெய்வமாய் இருக்கலாம். அத்தெய்வம் அக்குலத்திலேயே வாழ்ந்த முன்னோராகவும் இருக்கலாம், அல்லது ஏதாவதொரு நிகழ்வில் அசாதாரண செயல் புரிந்த, பெரும் நன்மை செய்தவராகவோ இருக்கலாம். நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த, வணங்கி வந்த குல தெய்வத்தைக் கும்பிடும் போது, அவர்கள் வரிசையில் நின்று வணங்கிய அந்த இடத்தில் நின்று நாம் வணங்கும் போது, குல தெய்வத்தின் அருள் கிடைப்பதோடு, முன்னோர்கள் பித்ருக்களாக வந்து ஆசி வழங்குவர். அதனால் தான் அனைத்து தெய்வங்களை விடவும் குலதெய்வம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியமானவர் என சொல்லப்படுகிறது. குலதெய்வம் கோவிலுக்கு அடிக்கடி செல்ல முடியா விட்டாலும், மாதத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக சென்று, வழிபட்டு விட்டு வர வேண்டும்.
குலதெய்வ தடை நீங்க
எந்த காரியம் செய்வதற்கு முன்பும் குல தெய்வத்தை கும்பிடுவது அவசியமாகிறது. பயணம் செல்வதற்கு முன்பு கூட குல தெய்வத்தை வணங்கினால் நம்முடைய குல தெய்வமே நமக்கு வழித்துணையாக வரும். குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். ஆனால் சிலரது குடும்பங்களில் குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்கு ஏதாவது ஒரு தடை வந்து கொண்டே இருக்கும். இப்படி குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமல் தடைகளை சந்திப்பவர்கள் வீட்டிலேயே குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
வீட்டிலேயே குலதெய்வத்தை வழிபடும் முறை
இந்த வழிபாட்டை மேற்கொள்ள குலதெய்வத்திற்கு உகந்த நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதாவது உங்கள் குலதெய்வம் பெண் தெய்வமாக இருந்தால் வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். நம்முடைய வீட்டில் பூஜை அறையில் எத்தனை சாமிகளின் படங்கள் இருந்தாலும் குல தெய்வத்தின் படம் தான் முதலில் இடம் பெற வேண்டும். வெள்ளிக்கிழமைக்கு முந்தைய நாளே வீடு மற்றும் குலதெய்வ படத்தை சுத்தம் செய்து விடுங்கள். வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையில் மண் விளக்கில் தீபம் ஏற்றி வைத்து, குலதெய்வ படத்தின் முன்பு ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி வைத்து வைத்து விடுங்கள்.
பின் ஒரு மஞ்சள் நிற துணியில் குலதெய்வத்தை வேண்டி உங்களால் இயன்ற அளவு காணிக்கையை வைத்து முடிச்சு போட்டு குலதெய்வத்தின் முன் வைக்க வேண்டும். எப்போது உங்களுக்கு குலதெய்வ கோயிலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுகின்றதோ அப்போது இந்த முடிச்சை கோவில் உண்டியலில் செலுத்தி விடுங்கள். முடிந்தால் இந்த வழிபாட்டின் போது குலதெய்வத்திற்கு இஷ்டமான பிரசாதத்தை நைவேத்தியமாக வைத்து குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவதாகவும், அதற்கு நீ தான் வழிவிட வேண்டும் எனவும் நினைத்து மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும். இதன் மூலம் குலதெய்வத்தின் கோபம் நீங்கும். தடைபட்ட காரியங்களும் எளிதில் நிறைவேறும். இந்த வழிபாட்டில் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டால் மிகவும் பலனளிக்கும்.
இதனையும் படியுங்கள் : குலதெய்வத்தின் அருள் கிடைக்க இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள்!