பொதுவாக ஒரு குலத்தில் முன்பு வாழ்ந்து ஏதேனும் ஒரு தியாகம் செய்து மறைந்து குளத்தில் பிற்காலத்தில் வருகின்றவர்களை காத்து அருள் புரிபவர்களே குலதெய்வங்கள். என்னதான் பல்வேறு தெய்வங்களை வணங்கினாலும் நம்முடைய குல தெய்வத்தை வணங்கினால் மட்டுமே நம் வீட்டிற்கு தேவையான அனைத்து சந்தோஷங்களையும் நிம்மதியையும் பெற முடியும். குலதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது. குறிப்பாக மாசி மற்றும் பங்குனி மாதங்களில் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் சிறந்தது. அனைவரும் தங்களுடைய குலதெய்வத்தை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

ஒரு சிலர் மாத மாதம் குலதெய்வ வழிபாடு செய்வார்கள். இன்னும் ஒரு சிலர் வார வாரம் அனைத்து தெய்வங்களையும் வழங்கும்போது முதலில் குலதெய்வத்தை வழிபட்டு விட்டே பிறகு மற்ற தெய்வங்களை வழிபடுவார்கள். ஆனால் குலதெய்வத்தின் அருள் அத்தனை எளிதில் நமக்கு கிடைத்து விடாது. எப்படி இருப்பினும் குலதெய்வத்தின் அருள் நமக்கு அவசியம் தேவை அந்த அருள் கிடைக்க செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
குலதெய்வத்தை வழிபடுவதன் முக்கியத்துவம்
ஒவ்வொருவருடைய குடும்பத்திற்கும் குலதெய்வம் மாறுபடும். நாம் குலதெய்வத்தை வழிபட்டு வந்தால் மட்டுமே மற்ற தெய்வங்களுடைய அருளையும் நம்மை பெற முடியும். வீட்டில் மகிழ்ச்சி பொருளாதார வளர்ச்சி கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை என அனைத்துமே குலதெய்வ வழிபாட்டால் மட்டுமே நம்மால் பெற முடியும். பொதுவாக நம் வீட்டில் ஏதேனும் ஒரு பிரச்சனை வந்தால் ஜோதிடர்களே முதலில் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் என்று தான் கூறுவார்கள். எனவே அடிக்கடி நாம் குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம். அடிக்கடி முடியவில்லை என்றாலும் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று குல தெய்வத்தை வழிபட வேண்டும்.
குலதெய்வ அருள் கிடைக்க
பரிகாரம் 1
குலதெய்வ வழிபாட்டில் இந்த தேங்காய் தீபம் நல்ல ஒரு பலனை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு நீங்கள் 5 தேங்காயை வாங்கி உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து 9 தேங்காய் மூடிகளை மட்டும் தனியாக எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து கொள்ளுங்கள். மீதம் உள்ள ஒரு மூடியை நெய்வேதியத்திற்கு உபயோகித்து கொள்ளலாம். 9 தேங்காய் மூடிகளையும் வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி விடுங்கள். இந்த தீபம் எறியும் போது குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்று பரிபூரணமாக வேண்டிக் கொள்ளுங்கள். இந்த தீப வழிபாட்டை 9 பௌர்ணமி அல்லது 9 அமாவாசை தினங்களில் தொடர்ந்து மேற்கொள்ளும் பொழுது குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பரிகாரம் 2
இந்த வழிபாட்டை செய்வதற்கு ஒவ்வொரு குலதெய்வத்திற்கும் என்று சிறப்பான நாட்கள் என ஒரு நாள் இருக்கும். அந்த நாளை நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். குலதெய்வ கோவிலுக்குச் செல்லும் போது ஒன்பது எலுமிச்சை தீபம் போட வேண்டும். அத்துடன் சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியமாக படைத்து மணதார குலதெய்வ அருள் கிடைக்க வேண்டும் என பிராத்தனை செய்ய வேண்டும். மேலும் வெத்தலை, பாக்கு, எலுமிச்சை பழம் சமர்பித்து இரண்டு விளக்குகள் ஏற்றி பூஜை முடிந்த பின் அந்த எலுமிச்சை பழங்களை வீட்டிற்கு வாங்கி வரலாம். இது நம்முடைய வீட்டில் நேர்மறையான ஆற்றலை பரவச் செய்து குலதெய்வத்தின் அருளை கிடைக்கச் செய்யும். ஆண் தெய்வமாக இருந்தால் அமாவாசை தினத்தில் வழிபடலாம். பெண் தெய்வமாக இருந்தால் பௌர்ணமி நாளில் வழிபடலாம்.
பரிகாரம் 3

குலதெய்வத்தின் அருளாசி நமக்கு கிடைக்க வேண்டுமானால், முதலில் நாம் நம்முடைய குலதெய்வத்தை திருப்திப்படுத்த வேண்டும். அதற்கு குலதெய்வத்திற்கு பிடித்த முறையில் நாம் பூஜை செய்து, தீபமேற்றி வழிபட வேண்டியது அவசியம். ஒவ்வொரு தெய்வத்திற்கு என ஒரு குறிப்பிட்ட மலர் எப்படி பிடித்தமானதாக உள்ளதோ, அதுபோலவே, நம்முடைய குலதெய்வத்திற்கு என்று பிடித்தமான எண்ணெய் ஒன்றும் உள்ளது. அந்த எண்ணெயை விளக்கில் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் தான் நம்முடைய குலதெய்வத்தின் பரிபூரண அருளாசி நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கும் கிட்டும். பெரும்பாலான குலதெய்வத்திற்கு பிடித்தமான எண்ணெய் என்றால் அது இலுப்பை எண்ணெய் தான்.
இதனையும் படியுங்கள் : குலதெய்வம் வீட்டிற்கு வருவதற்கும் பிற்காலத்தில் நடக்க போவதை முன்பே அறிந்து கொள்வதற்கும் செய்ய வேண்டியவை!





