மதிய உணவுக்கு சுட சுட இப்படி குதிரைவாலி அரிசி பருப்பு சாதம் ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள்!
பருப்பு சாதம் என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய அரிசி பருப்பு சாதம் நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். ஆனால் சற்று வழக்கத்துக்கு மாறாக நாம் பயன்படுத்தும் அரிசிக்கு பதில் இன்று குதிரைவாலியை பயன்படுத்தப்போகிறோம்.
பருப்பு சாதம் என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய அரிசி பருப்பு சாதம் நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். ஆனால் சற்று வழக்கத்துக்கு மாறாக நாம் பயன்படுத்தும் அரிசிக்கு பதில் இன்று குதிரைவாலியை பயன்படுத்தப்போகிறோம். சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. சிறுதானிய வகையைச் சேர்ந்த குதிரைவாலி உடலுக்கு மிகவும் நல்லது. அதிக நீர் தேவைப்படாத வானம் பார்த்த பூமியைச் சேர்ந்த புன்செய் பயிராகும். இந்த குதிரைவாலி உடலைச் சீராக வைக்க உதவுகிறது, சர்க்கரை அளவினை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்டாக வேலை செய்கிறது, இந்த அற்புதமான குதிரைவாலி அரிசியில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இவற்றில் அதிகமாகவே உள்ளன.
கோதுமையை விட குதிரைவாலியில் ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி அரிசியில் சாதம் செய்து சாப்பிட்டு வந்தால் அவை அண்டாது. இப்படி எண்ணற்ற நற்பயன்களை உள்ளடக்கியுள்ள குதிரைவாலி அரிசியில் பருப்பு சாதம் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம். கூடுமானவரை உடல் ஆரோக்கியத்திற்கு அரிசியை தவிர்த்து விட்டு, இப்படி சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயம் தானே. இந்த பருப்பு சாதத்தை குதிரைவாலி அரிசியில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வரகு, திணை, சாமை போன்ற மற்ற மில்லட் வகைகளிலும் இதேபோல பருப்பு சாதம் செய்தால் ருசியாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ருசியான குதிரைவாலி குஸ்கா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பிடி சாதம் கூட மிஞ்சாது!