மதிய உணவுக்கு ருசியான குதிரைவாலி குஸ்கா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பிடி சாதம் கூட மிஞ்சாது!

- Advertisement -

குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வெள்ளை குஸ்கா நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். ஆனால் சற்று வழக்கத்துக்கு மாறாக நாம் பயன்படுத்தும் அரிசிக்கு பதில் இன்று குதிரைவாலியை நாம் பயன்படுத்தப்போகிறோம். இதற்காக காசு செலவு பண்ணி பாசுமதி அரிசி வாங்க வேண்டாம். சீரகசம்பா அரிசி வாங்க வேண்டாம். சிம்பிளான இந்த குதிரைவாலி அரிசி குஸ்கா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

-விளம்பரம்-

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. சிறுதானிய வகையைச் சேர்ந்த குதிரைவாலி உடலுக்கு மிகவும் நல்லது. அதிக நீர் தேவைப்படாத வானம் பார்த்த பூமியைச் சேர்ந்த புன்செய் பயிராகும். இந்த குதிரைவாலி உடலைச் சீராக வைக்க உதவுகிறது, சர்க்கரை அளவினை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்டாக வேலை செய்கிறது, இந்த அற்புதமான குதிரைவாலி அரிசியில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.

- Advertisement -

மேலும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இவற்றில் அதிகமாகவே உள்ளன. அதோடு கோதுமையைவிட குதிரைவாலியில் ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி அரிசியில் சாதம் செய்து சாப்பிட்டு வந்தால் அவை அண்டாது. இப்படி எண்ணற்ற நற்பயன்களை உள்ளடக்கியுள்ள குதிரைவாலி அரிசியில் குஸ்கா தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

Print
No ratings yet

குதிரைவாலி குஸ்கா | kuthiraivali kuska recipe in tamil

குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வெள்ளை குஸ்கா நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். ஆனால் சற்று வழக்கத்துக்கு மாறாக நாம் பயன்படுத்தும் அரிசிக்கு பதில் இன்று குதிரைவாலியை நாம் பயன்படுத்தப்போகிறோம். இதற்காக காசு செலவு பண்ணி பாசுமதி அரிசி வாங்க வேண்டாம். சீரகசம்பா அரிசி வாங்க வேண்டாம். சிம்பிளான இந்த குதிரைவாலி அரிசி குஸ்கா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க. சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: kuthiraivali kuska
Yield: 4 People
Calories: 321kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 பிரியாணி இலை
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 அண்ணாச்சி பூ
  • 1 கப் குதிரைவாலி அரிசி
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 கப் புதினா கொத்தமல்லி
  • 4 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் குதிரைவாலி அரிசியை நன்கு அலசி சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  • ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, அண்ணாசிப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது, புதினா கொத்தமல்லி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
  • அதன்பிறகு குதிரைவாலி அரிசியை சேர்த்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும்.
  • குக்கரில் 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை திறந்து புதினா, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
  • அவ்வளவுதான் சுவையான குதிரைவாலி குஸ்கா தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 321kcal | Carbohydrates: 57g | Protein: 22g | Fat: 0.2g | Sodium: 380mg | Potassium: 31mg | Fiber: 5g | Vitamin A: 16IU | Calcium: 287mg | Iron: 7mg

இதனையும் படியுங்கள் : ருசியான கத்திரிக்காய் மசாலா இப்படி செய்து பாருங்க! பிரியாணிக்கு மட்டும் இல்ல சாதம்,டிபன் என அனைத்திற்கும் இது தான் பெஸ்ட் சைடிஷ்!