ருசியான கத்திரிக்காய் மசாலா இப்படி செய்து பாருங்க! பிரியாணிக்கு மட்டும் இல்ல சாதம்,டிபன் என அனைத்திற்கும் இது தான் பெஸ்ட் சைடிஷ்!

- Advertisement -

பிரியாணி சாப்பிடணும் அப்படின்னு ஆசைப்படுற எல்லாருமே கத்திரிக்காய் கிரேவி வச்சு சாப்பிடாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. ரொம்பவே விரும்பி சாப்பிடுற கத்தரிக்காய் மசாலா பிரியாணிக்கு தொட்டுக்கறதுக்கு எப்படி வித்தியாசமான முறையில் ரொம்ப சுலபமா செய்யறது அப்படின்னு பார்க்க இருக்கிறோம். இந்த சுவையான கத்திரிக்காய் மசாலா அசைவ  பிரியாணி , வெஜிடபிள் பிரியாணி, குஸ்கா,  நெய் சோறு  இப்படி எல்லாத்துக்குமே தொட்டு சாப்பிட ரொம்பவே சுவையா இருக்கும். 

-விளம்பரம்-

இந்த கத்திரிக்காய் மசாலாவை ரொம்பவே சுலபமா  வீட்ல இருக்குற பொருட்களை வைத்து ஈஸியா செய்து முடித்துவிடலாம் . இவ்வளவு சுலபமா செய்றோமே இதோட சுவை நல்லா இருக்குமா இல்லையா அப்படின்னு யோசிக்கிறவங்களுக்கு இதோட சுவை ரொம்பவே ருசியான ஒரு கத்திரிக்காய் மசாலாவா இருக்கும். நீங்க இந்த கத்திரிக்காய் மசாலா செய்து பிரிட்ஜில் வைத்து கூட ரெண்டு நாள் வரைக்கும் வச்சு சாப்பிட்டுக்கலாம். சுவையான கத்திரிக்காய் மசாலா வீட்ல இருக்குற எல்லாருக்கும் பிடிக்கும்.

- Advertisement -

பிரியாணி பிரியர்களுக்கு இந்த கத்திரிக்காய் மசாலா ரொம்பவே பிடிக்கும். ஏன் நான் பிரியாணியை கத்திரிக்காய் மசாலாவுடன் சாப்பிடும் போது தான் பிரியாணி பிரியர்கள் எல்லாம் பிரியாணி சாப்பிட்ட ஒரு திருப்தியே கிடைக்கும். அப்படி சுவையான இந்த கத்திரிக்காய் மசாலாவ வீட்டுல நம்ம செய்ய போறோம். அதுக்கு நம்ம எப்பவுமே ரொம்ப  ஃப்ரெஷ்ஷான கத்திரிக்காய பயன்படுத்தி செய்யணும். ஃப்ரெஷ்ஷான கத்திரிக்காய் பயன்படுத்தி செய்தால் மட்டும் தான் இந்த கத்திரிக்காய் கிரேவி ரொம்பவே சுவையா இருக்கும்.  சரி வாங்க சுவையான இந்த கத்திரிக்காய் மசாலா எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.

Print
2.50 from 2 votes

கத்திரிக்காய் மசாலா | Brinjal Masala Recipe In Tamil

பிரியாணி பிரியர்களுக்கு இந்த கத்திரிக்காய் மசாலா ரொம்பவே பிடிக்கும். ஏன் நான் பிரியாணியை கத்திரிக்காய் மசாலாவுடன் சாப்பிடும் போது தான் பிரியாணி பிரியர்கள் எல்லாம் பிரியாணி சாப்பிட்ட ஒரு திருப்தியே கிடைக்கும். அப்படி சுவையான இந்த கத்திரிக்காய் மசாலாவ வீட்டுல நம்ம செய்ய போறோம். அதுக்கு நம்ம எப்பவுமே ரொம்ப  ஃப்ரெஷ்ஷான கத்திரிக்காய பயன்படுத்தி செய்யணும். ஃப்ரெஷ்ஷான கத்திரிக்காய் பயன்படுத்தி செய்தால் மட்டும் தான் இந்த கத்திரிக்காய் கிரேவி ரொம்பவே சுவையா இருக்கும்.  சரி வாங்க சுவையான இந்த கத்திரிக்காய் மசாலா எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Brinjal Masala
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 14 கிலோ கத்திரிக்காய்
  • 14 கப் வேர்க்கடலை
  • 1 ஸ்பூன் வெள்ளை எள்
  • 1/4 ஸ்பூன் வெந்தயம்
  • 12 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மல்லிதூள்
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் வெல்லம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து வேர்க்கடலை, வெள்ளை எள்,வெந்தயம் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு பொன்னிறமாக வறுத்து எடுத்த பிறகு ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு கத்திரிக்காய்களை நன்றாக கழுவி விட்டு காம்பு பகுதியை மட்டும் நறுக்கி விட்டு முழு கத்திரிக்காயை நான்காக மட்டும் கீறிஅப்படியே வைக்க வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து கத்தரிக்காய் வதக்குவதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கத்தரிக்காய் நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அடுப்பில் ஒரு வானெலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  •  பிறகு அதில் மிளகு ,காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  •  பின்பு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். அதன் பிறகு கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  • இப்பொழுது அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • மசாலாவின் பச்சை வாசனை சென்று தக்காளி குழௌய வெந்த பிறகு அதில் நீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
     
  • ஒரு ஐந்து நிமிடம் வெந்த பிறகு அதில் வதக்கி வைத்துள்ள கத்தரிக்காய் சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு கப் நீர் சேர்த்து கலந்து மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும்.
  • கத்திரிக்காய் கிரேவி 10 நிமிடம் வெந்த பிறகு அதில் வெல்லம் சேர்த்து கலந்து விட்டு கொத்தமல்லி தழைகள் தூவி இறக்கி பரிமாறினால் பிரியாணிக்கு ஏற்ற சுவையான கத்திரிக்காய் மசாலா தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 9g | Protein: 1.2g | Fat: 2g | Sugar: 2g

இதையும் படியுங்கள் : கத்திரிக்காயில் சாப்ஸ் இப்படி கூட செய்யலாமா? சுவையில் சிக்கன் வறுவல் தோத்து போகும் ட்ரை பன்னி பாருங்க!