Advertisement
சைவம்

சிம்பிளான வெண்டைக்காய் ஃப்ரை இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

Advertisement

வெண்டைக்காயை வைத்து செய்யக்கூடிய நிறைய டிஷ்ஷஸ் ரொம்ப சூப்பரா இருக்கும் வெண்டைக்காய் புளி கூட்டு வெண்டைக்காய் கார குழம்பு வெண்டைக்காய் பொரியல் அப்படின்னு எல்லாமே ரொம்ப டேஸ்டா சூப்பரா இருக்கும். அந்த வகையில் இப்ப நம்ம வெண்டைக்காய் வச்சு செய்யக்கூடிய சிம்பிளான ஒரு வெண்டைக்காய் ஃப்ரை தான் பார்க்க போறோம். இந்த வெண்டைக்காய் ப்ரை செய்றதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே போதும். ஆனால் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும்.

இந்த வெண்டைக்காய் ஃப்ரை சாம்பார் சாதம் காரக்குழம்பு தயிர் சாதம்ன்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். டயட்ல இருக்குறவங்க கூட இந்த வெண்டைக்காய் ஃபிரைய கம்மியான எண்ணெயை ஊத்தி செஞ்சு சாப்பிடலாம் ரொம்பவே ஆரோக்கியமான ஒன்னு. வெண்டைக்காய் சாப்பிடுவதால் நம்ம உடம்புக்கு நிறைய ஹெல்த் பெனிபிட்ஸ் இருக்குன்னு கூட சொல்லலாம்.

Advertisement

வெண்டைக்காய் சாப்பிட்டால் நல்லா அறிவு வளரும். பொதுவாவே பச்சை காய்கறிகள் நம்ம உணவுல அடிக்கடி சேர்த்துக்கிட்டா ரொம்ப நல்லது பலவகையான மாத்திரை மருந்துகளை இல்லாத அளவுக்கான சத்துக்கள் இந்த பச்சை காய்கறிகளை இருக்கு அதனால பச்சை காய்கறியான இந்த வெண்டைக்காய அடிக்கடி நம்ம உணவுல சேர்த்துகிறது ரொம்பவே நல்லது.

 அந்த வகையில் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடக்கூடிய இந்த வெண்டைக்காய் ஃப்ரை நீங்களும் ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சிம்பிளான டேஸ்டான வெண்டைக்காய் ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

வெண்டைக்காய் ஃப்ரை | Ladies Finger Fry Recipe In Tamil

Advertisement
Print Recipe
வெண்டைக்காய் ஃப்ரை சாம்பார் சாதம் காரக்குழம்பு தயிர் சாதம்ன்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சுசாப்பிடலாம். டயட்ல இருக்குறவங்க கூட இந்த வெண்டைக்காய் ஃபிரைய கம்மியான எண்ணெயை ஊத்திசெஞ்சு சாப்பிடலாம் ரொம்பவே ஆரோக்கியமான ஒன்னு. வெண்டைக்காய் சாப்பிடுவதால் நம்ம உடம்புக்குநிறைய
Advertisement
ஹெல்த் பெனிபிட்ஸ் இருக்குன்னு கூட சொல்லலாம். இந்த வெண்டைக்காய் ஃப்ரை நீங்களும் ஒரு தடவை வீட்டில்செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.
Course Fry
Cuisine tamil nadu
Keyword ladies finger fry
Prep Time 5 minutes
Cook Time 14 minutes
Servings 4

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ வெண்டைக்காய்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்

Instructions

  • வெண்டைக்காயை சிறிது சிறிதாக நறுக்கி வெயிலில் சிறிது நேரம் காய வைத்து எடுத்துக் கொள்ளவும். வெயில்காயவைக்கும் பொழுது வழவழப்பு தன்மை குறைந்து விடும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை போட்டு வழவழப்பு தன்மை போகும் வரை நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவும்
  •  
    மறுபடியும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து வெண்டைக்காயையும் சேர்த்து நன்றாக எண்ணெயிலேயே வதக்கவும்
  •  
    அதில் தேவையான அளவு உப்பு மிளகாய் தூள் சேர்த்து பத்து நிமிடங்கள் நன்றாக வதக்கி கொள்ளவும்
  • வெண்டைக்காய் வெந்தவுடன் அதில் மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான சிம்பிளான வெண்டைக்காய்ஃப்ரை தயார்.

இதனையும் படியுங்கள் : அசத்தலான வெண்டைக்காய் இரு புளிக்குழம்பு சுவையாக செய்வது எப்படின்னு தெரிஞ்சா இனி புளி குழம்பு இப்படித்தான் வைப்பீங்க!

Advertisement
Ramya

Recent Posts

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

1 மணி நேரம் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

2 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

3 மணி நேரங்கள் ago

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…

7 மணி நேரங்கள் ago

நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…

7 மணி நேரங்கள் ago

நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…

7 மணி நேரங்கள் ago