அசத்தலான வெண்டைக்காய் இரு புளிக்குழம்பு சுவையாக செய்வது எப்படின்னு தெரிஞ்சா இனி புளி குழம்பு இப்படித்தான் வைப்பீங்க!

- Advertisement -

வெண்டைக்காய் இரு புளிக்குழம்புபு ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த சுவையான இரு புளிக் குழம்புக்கு அடிமையாகி விடுவீர்கள். அந்த வகையில் இப்படிப்பட்ட இரு புளி குழம்பு எப்படி வீட்டிலேயே ரொம்ப சுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். இப்படி வெண்டைக்காய் இரு  புளிக்குழம்பு வச்சா, எப்போ இந்தக் குழம்பை சாதத்தில் போட்டு சாப்பிட போறோம்னு சமைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊரும்.

-விளம்பரம்-

எப்போதும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான முறையில் ஒரு வெண்டைக்காய் இரு புளி குழம்பு ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடசுட சாதத்திற்கு இந்த வெண்டைக்காய் இரு புளி குழம்பு சூப்பர் சைட்டிஷ். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தால் போதும். வடித்த சாதம் அத்தனையும் பத்தாமல் போகும். இந்த குழம்பை சுடச்சுட இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டாலும் சுவையாகத்தான் இருக்கும். சரி நேரத்தைக் கடத்தாமல் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -
Print
5 from 1 vote

வெண்டைக்காய் இரு புளிக்குழம்பு | Ladies Finger Iru Puli kulambu In Tamil

வெண்டைக்காய் இரு புளிக்குழம்புபு ரொம்பவேவித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த சுவையான இரு புளிக் குழம்புக்கு அடிமையாகிவிடுவீர்கள். அந்த வகையில் இப்படிப்பட்ட இரு புளி குழம்பு எப்படி வீட்டிலேயே ரொம்பசுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்தபதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். இப்படி வெண்டைக்காய் இரு  புளிக்குழம்பு வச்சா, எப்போ இந்தக் குழம்பை சாதத்தில்போட்டு சாப்பிட போறோம்னு சமைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊரும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Ladies Finger Iru Pulikulambu
Yield: 4
Calories: 192kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • கிலோ வெண்டைக்காய்
  • புளி நெல்லிக்காய்அளவு
  • 1 கப் தயிர்
  • 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/2 கப் தேங்காய் துருவல்

தாளிக்க

  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • புளியை ஊற வைத்து, கரைத்து, 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் உளுத்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, அத்துடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து சற்று வதக்கி, ஆற விட்டு, பின்னர்சிறிது நீரைச் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
  • வெண்டைக்காயை இரண்டு அங்குல நீளத்திற்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயை வாணலியில் விட்டு, அதில் வெண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி, அத்துடன் வதக்கிய வெண்டைக்காய், உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை, ஒன்று அல்லது ஒன்றரைக் கப் நீரில் கரைத்து குழம்பில் ஊற்றிக் கிளறி விடவும்.
  • குழம்பு மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரைக் கட்டியில்லாமல் நன்றாகக் கடைந்து ஊற்றவும். (கெட்டியான மோர் இருந்தாலும் சேர்க்கலாம்). அடுப்பை மிதமான தீயில் வைத்து, குழம்பு மீண்டும் ஒரு முறை கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வைத்து, தாளித்துக் கொட்டவும்.

செய்முறை குறிப்புகள்

இந்தக் குழம்பில் விருப்பமான எந்தக் காயையும் சேர்க்கலாம். ஆனால், கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளைப்பூசணிக்காய், சவ்சவ், வாழைத்தண்டு ஆகியவை பொருத்தமாயிருக்கும்.

Nutrition

Serving: 300g | Calories: 192kcal | Carbohydrates: 18g | Protein: 39g | Cholesterol: 3mg | Potassium: 378mg | Iron: 2mg

இதையும் படியுங்கள் : சாதத்துடன் சாப்பிட ருசியான வெண்டைக்காய் முந்திரி பொரியல் இப்படி செய்து பாருங்கள்!  ஒரு சட்டி சோறும் காலியாகும்!