Home காலை உணவு காலை டிபனுக்கு பக்காவான முள்ளங்கி ஊத்தாப்பம் ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்! 2 ஊத்தாப்பம்...

காலை டிபனுக்கு பக்காவான முள்ளங்கி ஊத்தாப்பம் ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்! 2 ஊத்தாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம், வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, கேரட் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை.மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. வீடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரே தோசை வகையை செய்து சாப்பிட்டு சலித்து போய் இருக்கலாம் ஆகவே சற்று வித்தியாசமான முறையில் ஊத்தப்பம் செய்து பார்க்கலாமே.

-விளம்பரம்-

காலையில் எப்பொழுதும் பொங்கல், இட்லி, தோசை என்று அரைச்ச மாவையே திரும்பி திரும்பி அரைக்கிறீர்களா?? கவலை வேண்டாம், சுவையும், சத்தும் கலந்த ஒரே உணவு முள்ளங்கி ஊத்தாப்பம். ஊத்தாப்பம் அப்படினாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். கடைகளில் ஊத்தாப்பங்கள் வாங்கி சாப்பிடாத ஆட்களே இருக்க மாட்டாங்க. அந்த காலத்தில் பாட்டி செய்யும் ஊத்தாப்பத்தின் சுவையை தனி. அதை அடிச்சிக்க ஆளே கிடையாது. அந்த ஊத்தாப்பத்தை வெச்சி தான் இன்றைய காலத்தில் பீட்சா என்ற ஒரு உணவை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

நமது தென்னிந்திய உணவு வகையில் கொழுப்பு குறைந்த, புரதம் நிறைந்த உணவுகள் ஏராளமாக உள்ளன. அதில் ஒன்று தான் ஊத்தாப்பம். புரதம் உள்ள உணவுகளை நீங்கள் உண்ணும்போது உங்களுக்கு நிறைவாக உண்ட உணர்வைத் தரும். எடை அதிகரிப்பும் ஏற்படுத்தாது. இந்த முள்ளங்கி ஊத்தாப்பத்துக்கு கொத்தமல்லி சட்னி வச்சு சாப்பிடும்போது அவ்வளவு ஒரு சுவையா இருக்கும். இந்த ஊத்தாப்பத்தை வீட்லயே செய்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாவும் இருக்கும் அதே நேரம் பிடிச்ச மாதிரியான ஒரு உணவாகவும் இருக்கும்.

Print
4.50 from 2 votes

முள்ளங்கி ஊத்தப்பம் | Radish Uthappam Recipe In Tamil

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம், வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, கேரட் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை.மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. வீடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரே தோசை வகையை செய்து சாப்பிட்டு சலித்து போய் இருக்கலாம் ஆகவே சற்று வித்தியாசமான முறையில் ஊத்தப்பம் செய்து பார்க்கலாமே. காலையில் எப்பொழுதும் பொங்கல், இட்லி, தோசை என்று அரைச்ச மாவையே திரும்பி திரும்பி அரைக்கிறீர்களா?? கவலை வேண்டாம், சுவையும், சத்தும் கலந்த ஒரே உணவு முள்ளங்கி ஊத்தாப்பம். இந்த முள்ளங்கி ஊத்தாப்பத்துக்கு கொத்தமல்லி சட்னி வச்சு சாப்பிடும்போது அவ்வளவு ஒரு சுவையா இருக்கும். இந்த ஊத்தாப்பத்தை வீட்லயே செய்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாவும் இருக்கும் அதே நேரம் பிடிச்ச மாதிரியான ஒரு உணவாகவும் இருக்கும்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Radish Uthappam
Yield: 2 People
Calories: 49kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 3 முள்ளங்கி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 கேரட்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • 3 கப் தோசை மாவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி குக்கரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • கேரட்டை நன்கு கழுவி விட்டு தோல் நீக்கி துருவி வைத்துக்கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின்‌ முள்ளங்கி நன்றாக ஆறியதும் அதை ஒரு‌ மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு தோசை மாவில் முள்ளங்கி விழுது, துருவிய கேரட், பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நாம் கலந்து வைத்த மாவை ஊத்தப்பமாக ஊற்றி எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி ஊத்தப்பம் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 49kcal | Carbohydrates: 3.9g | Protein: 4.8g | Fat: 2.1g | Sodium: 39mg | Potassium: 233mg | Fiber: 1.9g | Vitamin A: 7IU | Vitamin C: 14.8mg | Calcium: 25mg | Iron: 2.34mg

இதனையும்‌ படியுங்கள் : சத்துக்கள் நிறைந்த முளைக்கீரையில் ஒரு தரம் சாம்பார் இப்படி செய்து பாருங்கள் அட்டகாசமான ருசியில் இருக்கும்!