- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- LUNCH
கீரை இருக்கிறது என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முளைக்கீரை உள்ளதா? இதுவரை முளைக்கீரையை கொண்டு பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முளைக்கீரையை கொண்டு சாம்பார் செய்யுங்கள். நம்முடைய ஊர்களில் அதிகம் கிடைக்கும் கீரைகளில் முளைக்கீரையும் ஒன்று. இது ஏராளமான மருத்துவப் பலன்களை நமக்கு வழங்கி வருகிறது. முளைக்கீரையில் ஏராளமான மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது.
முளைக்கீரை இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியது. இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள முளைக்கீரையில் எப்படி சுவையான சாம்பார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம். முளைக்கீரையை பொரியலாக அல்லது கடையலாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது ஒரு சில பெரியவர்களும் சாப்பிட மறுக்கலாம்.
ஆனால் இது போல சாம்பார் செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முளைக்கீரை சாம்பார் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் முளைக்கீரை சாம்பார் சத்தானதும் கூட. ஏனெனில் முளைக்கீரையில் உள்ள சத்துக்கள் அனைத்துமே இந்த சாம்பாரில் முழுமையாக இறங்கியிருக்கும். எப்படி இந்த சுவையான ஆரோக்கியமான முளைக்க்ரை சாம்பார் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
Ingredients
Method
முதலில் முளைக்கீரையை சுத்தம் செய்து நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். தேங்காயை மிக்ஸியில் சேர்த்து அரைத்துவைத்து கொள்ளவும்.
பின் குக்கரில் பருப்பு, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்துநன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் முளைக்கீரையை சேர்த்து மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
கீரை சீக்கிரமே வெந்து விடும் வெந்த பிறகு தேங்காயை சேர்த்து ஒரு கொதி வந்ததும் வேகவைத்த பருப்பில்சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
சாம்பார் கொத்தித்த உடன் இறக்கி சாதத்தோடு சூடாக பரிமாறினால் சுவையான முளைக்கீரை சாம்பார் தயார்.






