வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

- Advertisement -

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் கிரேவிகள் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில்ஆலு மேத்தி கிரேவி செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையுடன் இருப்பதோடு, சப்பாத்தி, நாண், ஜீரா ரைஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். நம்மில் பலருக்கு எளிமையான முறையில் சப்பாத்தி செய்யத் தெரிந்த அளவுக்கு, அதற்கேற்ப கிரேவி செய்யத்தெரியாது. ஆனால் சுவையான கிரேவி செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள். பொதுவாக பஞ்சாபி சமையல் என்றாலே அது தனி சுவைத்தான். பஞ்சாபி தாபா என்றாலே மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். அந்த வகையில் பஞ்சாபி முறையில் ஆலு, மேத்தி வைத்து இது போன்று கிரேவி செய்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்களெல்லாம் அசந்து போய்டுவாங்க. ஆலு மற்றும் மேத்தி கொண்டு பஞ்சாபி தாபா ஸ்டைலில் எப்படி ஒரு கிரேவி செய்யலாம் என்று பார்ப்போம். இந்த ஆலு மேத்தி கிரேவி செய்வது மிகவும் சுலபமாக இருப்பதோடு, பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த ஆலு மேத்தி கிரேவி பஞ்சாபி சுவையில் இப்படி ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள், அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

-விளம்பரம்-
Print
5 from 1 vote

ஆலு மேத்தி கிரேவி | Aloo Methi Gravy Recipe In Tamil

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் கிரேவிகள் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் ஆலு மேத்தி கிரேவி செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையுடன் இருப்பதோடு, சப்பாத்தி, நாண், ஜீரா ரைஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அந்த வகையில் பஞ்சாபி முறையில் ஆலு, மேத்தி வைத்து இது போன்று கிரேவி செய்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்களெல்லாம் அசந்து போய்டுவாங்க. ஆலு மற்றும் மேத்தி கொண்டு பஞ்சாபி தாபா ஸ்டைலில் எப்படி ஒரு கிரேவி செய்யலாம் என்று பார்ப்போம். இந்த ஆலு மேத்தி கிரேவி செய்வது மிகவும் சுலபமாக இருப்பதோடு, பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமாகவும் இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner
Cuisine: Indian
Keyword: Aloo Methi Gravy
Yield: 4 People
Calories: 164kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 4 உருளைக்கிழங்கு
  • 1 கட்டு வெந்தயக்கீரை
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 பிரிஞ்சி இலை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி

செய்முறை

  • முதலில் வெந்தயக்கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் உருளை கிழங்கை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு, பிரிஞ்சி இலை, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து விடவும். அதன்பிறகு நறுக்கி வைத்துள்ள வெந்தயக்கீரையை சேர்த்து வதக்கி, கொஞ்சமாக தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.
  • பின் கரம் மசாலத்தூள், கஸ்தூரி மேத்தி சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான ஆலு மேத்தி கிரேவி தயார். இந்த ஆலு மேத்தி கிரேவியை சப்பாத்தி, ரொட்டி, நாண் போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சுவைக்கலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 164kcal | Carbohydrates: 3.7g | Protein: 4.6g | Fat: 2g | Sodium: 8mg | Potassium: 420mg | Fiber: 4g | Vitamin A: 4IU | Vitamin C: 27mg | Calcium: 20mg | Iron: 9.2mg

இதனையும் படியுங்கள் : பூரி, சப்பாத்திக்கு இனி பஞ்சாபி ஆலு மேத்தி இப்படி செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

- Advertisement -