கிராமத்து ஸ்டைலில் வெண்டைககாய் மோர் குழம்பு ஓரு தரம் செய்து பாருங்க! ஒரு சொட்டு குழம்பு கூட மிச்சமாகாது!

- Advertisement -

மோர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. அத்தகைய மோரை சாதாரணமாக குடிப்பது போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக அதனை குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். இது உண்மையிலேயே அற்புதமாக இருக்கும். மோர் குழம்பு தமிழகத்தில் பரவலாக செய்யப்படும் ஒரு விதமான குழம்பு. மோர் குழம்பை தமிழகத்திலேயே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள்.

-விளம்பரம்-

சில பகுதிகளில் இதில் எந்த ஒரு காயையும் சேர்க்காமலும், சில பகுதிகளில் அவரவர் விருப்பத்திற்கேற்ப பூசணிக்காயையோ, வெள்ளரிக்காயையோ, அல்லது வெண்டைக்காயையோ சேர்த்தும், மற்றும் சில பகுதிகளில் மிளகை சேர்த்தும் இந்த மோர் குழம்பை செய்கிறார்கள். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது வெண்டைக்காயை சேர்த்து செய்யப்படும் மோர் குழம்பு. வெண்டைக்காய் புளிக்குழம்பு வைப்பது போல வெண்டைக்காயிலும் மோர் குழம்பு வைக்கலாம்.

- Advertisement -

நாம் வழக்கமாக செய்து உண்ணும் குழம்புகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று. மோர் குழம்பு செய்வதற்கு வெறும் தயிர் இருந்தால் போதும் இதை வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம். மேலும் மற்ற குழம்புகளை போல இவை செய்வதற்கும் அதிக நேரம் பிடிக்காது. உடலுக்கு குளிர்ச்சியூட்டும் மோர் குழம்பை எளிமையாக செய்வது குறித்து பார்க்கலாம்.

Print
5 from 1 vote

வெண்டைக்காய் மோர் குழம்பு | Ladies Finger Mor Kulambu Recipe In Tamil

வெண்டைக்காய் புளிக்குழம்பு வைப்பது போல வெண்டைக்காயிலும் மோர் குழம்பு வைக்கலாம். நாம் வழக்கமாக செய்து உண்ணும் குழம்புகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று. மோர் குழம்பு செய்வதற்கு வெறும் தயிர் இருந்தால் போதும் இதை வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம். மேலும் மற்ற குழம்புகளை போல இவை செய்வதற்கும் அதிக நேரம் பிடிக்காது. உடலுக்கு குளிர்ச்சியூட்டும் மோர் குழம்பை எளிமையாக செய்வது குறித்து பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Kulambu
Cuisine: tamil nadu
Keyword: Ladies Finger Mor Kulambu
Yield: 4
Calories: 143kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 6 வெண்டைக்காய்
  • 1 கப் சிறிது புளித்த தயிர்

அரைக்க

  • 1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பை ஊறவைத்தது
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • உப்பு
  • 1 துண்டு இஞ்சி சிறிதளவு
  • 4 சின்ன வெங்காயம்
  • 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் தனியா
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் மிளகு

தாளிக்க

  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 வரமிளகாய்
  • கறிவேப்பிலை சிறிது
  • 1 சிட்டிகை பெருங்காயம்

செய்முறை

  • முதலில் வெண்டைக்காயை கழுவி துடைத்துவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, 1 வரமிளகாய் நறுக்கிய வெண்டைக்காய் சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நன்கு வதக்கி விடவும்.
  • பின் துவரம் பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  •  
    ஒரு மிக்ஸியில் துவரம் பருப்பு ஊற வைத்தது, இஞ்சி,பச்சை மிளகாய், மிளகு, சீரகம், தனியா, சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், சிறிது மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் இந்த மோர் குழம்பை அடுப்பில் வைத்து, சூடேற்றவும்.
  • ஓரங்களில் நுரை வரும் பொழுது அடுப்பை அணைத்துவிட்டு, தாளித்து வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து விடவும்.
  • சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 143kcal | Carbohydrates: 63g | Protein: 22g | Fat: 2g | Sodium: 1300mg