நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் செய்ய வேண்டிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு!

இந்த உலகத்தில் நம்முடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நமக்கென ஒரு வேலை வேண்டும் அது அரசாங்க வேலையாக இருந்தாலும் சரி தனியார் வேலையாக இருந்தாலும் சரி நல்ல வேலை கிடைத்துவிட்டால் அதிலிருந்து வரும் பணத்தால் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். ஒரு சிலர் என்னதான் வேலை தேடிக

By ·

இந்த உலகத்தில் நம்முடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நமக்கென ஒரு வேலை வேண்டும் அது அரசாங்க வேலையாக இருந்தாலும் சரி தனியார் வேலையாக இருந்தாலும் சரி நல்ல வேலை கிடைத்துவிட்டால் அதிலிருந்து வரும் பணத்தால் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். ஒரு சிலர் என்னதான் வேலை தேடிக் கொண்டே இருந்தாலும் கடைசி வரையில் தேர்வாகாமலே போய்விடுவார்கள் இன்டர்வியூ போவதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் தேர்வாக முடியாத சூழ்நிலை ஏற்படும்.

வேலைவாய்ப்பு

வேலை கிடைக்கவில்லை என்றால் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழல் ஏற்படும். நம்முடைய முயற்சிகள் அனைத்தும் வீணாகிக்கொண்டே இருக்கும். வேலை பார்க்காததால் நிறைய அவ பெயர்களும் கிடைக்கும். அந்த சூழலில் நீங்கள் லட்சுமி நரசிம்மரை 9 வாரங்கள் வழிபாடு செய்து வந்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும். பொதுவாக அனைவரது வீட்டு பக்கத்திலும் நரசிம்மர் கோவில் இருக்காது நரசிம்மர் கோவில் இருந்தால் அங்கு இந்த வழிபாட்டை செய்யலாம் இல்லையென்றால் பெருமாள் கோவிலிலும் செய்யலாம்.

பரிகாரம் செய்ய வேண்டிய முறை

ஒரு தாம்பாள தட்டில் வெற்றிலை பாக்கு ஏலக்காய் வாழைப்பழம் சுக்கு, வெல்லம் அனைத்தையும் வைத்து 11 குருதட்சனை வைத்து கோவிலில் உள்ள குருக்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். லக்ஷ்மி நரசிம்மர் கோவிலை ஒன்பது முறை வலம் வரவேண்டும்.

பரிகாரம் செய்ய வேண்டிய நாள்

திங்கட்கிழமை தோறும் மாலை 7 மணியில் இருந்து 7:30 மணிக்குள் நரசிம்மர் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். பிறகு கோவிலிலேயே அமர்ந்து நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒன்பது வாரம் முடிந்த பிறகு உங்கள் தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்காமல் இருந்தாலும் ஏதாவது ஒரு வேலை கண்டிப்பாக கிடைக்கும் இந்த ஒன்பது வார முடிவில் உங்களுக்கு சில நன்மைகளும் நடக்கும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சில வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். முழு மனதோடு இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : சுக்கிரன் பெயர்ச்சியால் வேலை, வியாபாரத்தில் அதிக லாபம் பெற போகும் ராசிகாரர்கள் இவர்கள் தான்!

Recipes AMP · Quick view
View full