Home ஆன்மிகம் சுக்கிரன் பெயர்ச்சியால் வேலை, வியாபாரத்தில் அதிக லாபம் பெற போகும் ராசிகாரர்கள் இவர்கள் தான்!

சுக்கிரன் பெயர்ச்சியால் வேலை, வியாபாரத்தில் அதிக லாபம் பெற போகும் ராசிகாரர்கள் இவர்கள் தான்!

ஆடம்பரம், ஆசை, செலவு, சுகபோகம் ஆகியவற்றுக்குக் காரணி சுக்கிர பகவான். இந்த கிரகம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக நவக்கிரகங்களின் பார்க்கப்படுகிறது. இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம் சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.‌ அந்தவகையில் ஒவ்வொரு முறையும் சுக்கிரன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், அது சில ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் அது கோடீஸ்வர யோகமாக அமைகிறது.

-விளம்பரம்-

சுக்கிரன் ஒருவருக்கு நல்ல நிலையில் இருந்தால் வசதியான மனைவி அமைவார். நன்றாக சம்பாதிக்கும் மனைவி அமைவார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் பயணம் செய்யும் ராகு உடன் உச்சம் பெறும் சுக்கிரன் இணைவது சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கப்போகிறது. சுக்கிரன் ஏப்ரல் 24ஆம் தேதி இரவு 11.44 மணிக்கு மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகிறார். மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இதனால் பிரகாசமாகும். சில ராசிக்காரர்கள் விபரீத ராஜயோகத்தால் பண மழையில் நனையப்போகிறார்கள்.

மேஷம்

சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் அமரப்போகிறார் சுக்கிரபகவான். இந்த ராசிக்காரர்கள் பெரும் நிதி ஆதாயத்தையும் நன்மைகளைப் பெறலாம். முதலீடு செய்வதன் மூலம் எதிர்பாராத நல்ல லாபத்தை நீங்கள் பெறலாம். சுக்கிரன் அமரப்போவதால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள் பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். வாழ்க்கை துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இப்போது நல்ல காலம் ஆரம்பம் ஆகும். வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். பண வரவு அதிகமாகும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமண வாய்ப்புகள் கைகூடி வரும்.

மிதுனம்

சுக்கிர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு பல தரப்பில் இருந்து நன்மைகள் மட்டுமே உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 10 வது இடத்தில் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று பயணம் செய்யப்போகிறார். மனைவி வழியில் பண வருமானம் அதிகரிக்கும். மிதுன ராசிக்காரர்கள் தங்களின் உத்தியோகத்தில் முன்னேறும் வாய்ப்புகளை பெறுவார்கள். நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அஷ்டம ஸ்தானத்தில் பல கிரகங்கள் இருந்தால் சற்று வம்பு வழக்குகளில் இருந்து நீங்கள் விலகியே இருப்பது மிக மிக நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். மாத சம்பளம் அதிகரிக்கும் என்பதால் பொருளாதார நிலை மேம்படும்.

துலாம்

சுக்கிரன் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் தங்களின் வருமானத்தில் நல்ல அதிகரிப்பை காணலாம். உங்கள் ராசி அதிபதியும் எட்டாம் வீட்டிற்கும் அதிபதியுமான சுக்கிரன் 6ஆம் வீட்டில் உச்சம் பெற்று பயணம் செய்யப்போவதால் விபரீத ராஜயோகம் கைகூடி வரப்போகிறது. எதிரிகள் தொல்லை நீங்கும். இது வரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒரேடியாக விலகும். பழைய வாகனம் அல்லது புதிய வாகனத்தை வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் சற்று அக்கறை காட்டுவது நல்லது. இன்னும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டிய காலமிது. பணத்தை சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள்.

-விளம்பரம்-

மகரம்

சுக்கிரன் பெயர்ச்சி மற்றும் லட்சுமி தேவியின் அருளால் மகர ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 3வது வீடான மீனம் ராசியில் சுக்கிரன் குடியேரப்போகிறார். ராகு உடன் சுக்கிரன் கூட்டணி சேரப்போவதால் முயற்சி ஸ்தானத்தில் குடியேறும் சுக்கிரனால் பணியிடத்தில் நல்ல விசயங்கள் நடக்கும்.‌ சொத்து அல்லது மதிப்புமிக்க பொருட்களை இந்த நேரத்தில் வாங்குவீர்கள். இந்த சுக்கிரனின் ராசி மாற்றம் அதாவது சுக்கிர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். பணத்தை குவிப்பதில் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் ஏதாவது பெரிய முதலீடு செய்ய நினைத்திருந்தால் அதை இப்போது செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்வில் இனிமை அதிகரிக்கும்.

இதனையும் படியுங்கள் : சித்திரை மாதத்தில், வீரம் தைரியம் பலம் என அனைத்தையும் பெற்று அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் இந்த ஐந்து ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.