Home ஆன்மிகம் சித்திரை மாதத்தில், வீரம் தைரியம் பலம் என அனைத்தையும் பெற்று அதிர்ஷ்ட மழையில் நனைய போகும்...

சித்திரை மாதத்தில், வீரம் தைரியம் பலம் என அனைத்தையும் பெற்று அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் இந்த ஐந்து ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.

சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழையும் காலம் சித்திரை மாதம் ஆகும். ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 8.51 மணிக்கு செவ்வாய் என்ற ஆசியான மேஷ ராசிக்குள் நுழைய உள்ளார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் இருப்பதால் குரு சூரியன் சேர்க்கையால் ராஜயோகம் மற்றும் புதாதித்ய யோகம் உருவாகப் போகிறது.

-விளம்பரம்-

நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் அந்த ராசியில் உச்சமடைய போகிறார். இதனால் வீரம் தைரியம் பலம் என அனைத்தையும் பெற்று அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் சில ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு சித்திரை மாதத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும் சிறப்புகளும் அமையும். இதனால் வாழ்வில் இன்பத்தையும் ஆரோக்கியமான உடல் நலத்தையும் மனதிலும் உடலளவிலும் புதிய ஆற்றலும் கிடைக்கும். வியாபாரம் ஆரம்பித்தால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியான அனைத்து காரியங்களிலும் வெற்றியை அடைவீர்கள். பதவி உயர்வு கிடைத்த வேலை வாய்ப்புகள் அதிகரித்த பொருளாதார ரீதியாக உங்களுடைய வாழ்க்கை கூடிய விரைவில் மாறிவிடும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு சித்திரை மாதம் சூரியனின் பெயர்ச்சியால் அதிக அளவில் பெரிய பொருட்கள் வாங்கும் யோகம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் துணையின் ஆதரவும் மகிழ்ச்சியான வாழ்க்கையும். வியாபாரத்தில் பல சவால்களை சந்தித்து அதில் வெற்றி காண்பீர்கள். உடல் அளவில் ஆரோக்கியம் அதிகரித்து உடல் ரீதியாக புது தெம்பு கிடைக்கும். பொருளாதார ரீதியாகவும் உடலளவிலும் ஆரோக்கியத்திலும் புதிய ஆற்றல் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு இந்த சித்திரை மாதத்தில் சூரிய பகவான் பத்தாமிடத்தில் கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வாழ்க்கை சிறப்பாக அமையும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் அதை நல்ல லாபமும் வெற்றியும் கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் உங்களை வந்து சேரும். குடும்ப உறவுகள் மேம்பாடு அடையும். பொருளாதார ரீதியாக உங்கள் வாழ்க்கை சிறப்படையும்.

-விளம்பரம்-

சிம்ம ராசி

இந்த சித்திரை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அடைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு நல்ல சம்பளம் அனைத்துமே கிடைக்கும். பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறுவீர்கள். வீட்டில் சுப காரிய செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் முன்னதாக செய்த முதலீடு இப்பொழுது லாபத்தை கொடுக்கும். குடும்ப உறவினர்களுடன் ஆன்மீக பயணம் செல்லும் முடிவுகளை மேற்கொள்ளலாம்.

விருச்சிக ராசி

சித்திரை மாதத்தில் சூரிய பகவானின் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழிலிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் கிடைக்கும். வேலையிலும் தொழிலிலும் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அரசு சம்பந்தமான காரியங்கள் சுலபமாக முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களின் அனைத்து செயல்பாடுகளும் நல்ல வழியிலும் மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் இருக்கும்.

இதனையும் படியுங்கள் : சனீஸ்வர பகவானின் எழுச்சியால் 2024லில் உச்சத்திற்கு செல்ல போகும் ராசிகள் யார் தெரியுமா?

-விளம்பரம்-